இன்றைய போட்டியில் கெய்லுக்கு அஸ்வின் நெருக்கடி கொடுப்பார்: பயிற்சியாளர் பிளமிங்
Page 1 of 1

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வீராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
பெங்களூர் அணியின் பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல் முதுகெலும்பாக உள்ளார். அவர் 4 ஆட்டத்தில் 191 ரன் எடுத்துள்ளார். சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக அவர் 14 சிக்சர் அடித்துள்ளார். அவர் சென்னை அணிக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கெய்லுக்கு சென்னை சுழற்பந்து வீரர் அஸ்வின் நெருக்கடி கொடுப்பார் என்று பயிற்சியாளர் பிளமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
சென்னை-பெங்களூர் அணிகள் மோதும் ஆட்டம் எப்போதுமே சிறப்பாக இருக்கும். இரு அணிகளும் ஒன்றுக்கொன்று எதிரிகளாகும் என்றாலும் சேப்பாக்கத்தில் விளையாடுவது எங்களுக்கு சாதகமே. பெங்களூர் அணிக்கு எதிராக இங்கு 4 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளோம். ஒரு முறை தான் தோற்றுள்ளோம்.
சேப்பாக்கத்தில் ஆடுவது தான் எங்கள் பலமே. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடததால் தோற்றோம். தற்போது ஹஸ்சியும், முரளிவிஜய்யும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். பெங்களூர் அணி வலுவானது. அந்த அணியை சாதாரணமாக நினைக்க வில்லை. கிறிஸ் கெய்ல், வீராட் கோலி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அந்த அணி மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க முடியும். ஆனால் கெய்ல் சென்னை மைதானத்தில் சிறப்பாக ஆடியது இல்லை.
கடந்த காலங்களில் அவருக்கு எதிராக அஸ்வின் சிறப்பாக பந்துவீசி இருக்கிறார். இந்த முறையும் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி கெய்லுக்கு நெருக்கடி கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த போட்டியில் சென்னை அணி சிறப்பாக விளையாடி பஞ்சாப்பை வென்றது. அணியில் உள்ள 4 வெளிநாட்டு வீரர்களும் சிறப்பான உள்ளனர். அவர்கள் காயம் எதுவும் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளனர். இதனால் அணியில் மாற்றம் செய்வது கடினமே. எனவே அல்பி மார்கல் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.
இவ்வாறு பிளமிங் கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்றைய போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக கெய்லின் அதிரடி தொடருமா?
» காமெடியும் குணசித்திரமும் அஸ்வின் ராஜா ஆசை
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெற
» ஜடேஜா சிறந்த மேட்ச்வின்னர்: டோனி, பிளமிங் பாராட்டு
» ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்: வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்- பிளமிங்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum