ஸ்ரீசாந்த் தேவையில்லாமல் மீண்டும் பிரச்சினையை கிளப்புகிறார்: போட்டி நடுவர் பரூக் என்ஜினீயர்
Page 1 of 1

2008-ம் ஆண்டு நடந்த அறிமுக ஐ.பி.எல். போட்டியில் மொகாலி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்பஜன்சிங். கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக ஹர்பஜன்சிங் எஞ்சிய போட்டிகளில் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் அப்போதே முடிந்துபோனது. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த சர்ச்சை கிளப்பட்டுள்ளது. ஹர்பஜன்சிங் தன்னை திட்டமிட்டே தாக்கினார். கன்னத்தில் அறையவில்லை. முதுகில் குத்தினார் என்று ஸ்ரீசாந்த் டூவிட்டர் இணைய தளத்தில் தெரிவித்தார். நான் உணர்ச்சி வசப்பட்டு தான் என் மீது பழிசுமத்தப்பட்டது என்றும், இது தொடர்பாக வீடியோ காட்சியை வெளியிட வேண்டும் என்றும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
ஸ்ரீசாந்த்தின் இந்த புதிய குற்றச்சாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஹர்பஜன் சிங்கிடம் கேட்ட போது அவர் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். இதற்கிடையே அந்த வீடியோ காட்சியின் ஒரு நகல் தன்னிடம் இருப்பதாகவும், அதே தேவைப்பட்டால் வெளியிடுவேன் என்று ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் அந்தப்போட்டியின் போது மேட்ச் நடுவராக இருந்தவரும், முன்னாள் விக்கெட் கீப்பருமான பரூக் என்ஜினீயர் ஸ்ரீசாந்த் தேவையில்லாமல் மீண்டும் பிரச்சினையை கிளப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஸ்ரீசாந்த்தின் இந்த புதிய குற்றச்சாட்டு தேவையில்லாதது. அந்த விவகாரம் முடிந்து போன ஒன்றாகும். சில ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீசாந்த் இப்போது புதிதாக மீண்டும் குற்றச்சாட்டுவது தொழில் முறைக்கு எதிரானது. எனது முன்னிலையில் அந்த சம்பவம் அப்போதே முடிந்து விட்டது. உணர்ச்சி வேகத்தில் நடந்த அந்த சம்பவத்துக்காக ஹர்பஜன்சிங் அப்போதே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
வீரர்கள் ஒருவருக் கொருவர் மோதிக்கொள்வதை இங்கிலாந்து பிரிமீயர் `லீக்' கால்பந்து போட்டியில் அதிகமாக பார்த்து இருக்கிறேன். இதனால் இது ஒரு பெரிய விஷயம் இல்லை.
இவ்வாறு பரூக் என்ஜினீயர் கூறியுள்ளார்.
ஹர்பஜன் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஸ்ரீசாந்த் தற்போது ராஜஸ்தான் அணியில் உள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம்: மீண்டும் பிரச்சினையை கிளப்பும் அமீர்
» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டி
» போட்டி பாடல்கள்: தனுஷ், சிம்பு மீண்டும் மோதல்
» தேவையில்லாமல் என்னை இழுக்கிறார்கள்: அமீர்
» 2008 ஐ.பி.எல். போட்டியின்போது ஹர்பஜன் என்னை திட்டமிட்டு குத்தினார்: ஸ்ரீசாந்த்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum