தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டி
Page 1 of 1

சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி, கேயார் அணிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சந்திரசேகரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கேயார் தலைமையிலான தயாரிப்பாளர்கள் கொண்டு வந்தனர். கோர்ட் ஆணைப்படி இந்த வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டன. இதில் தீர்மானத்தை ஆதரித்து அதாவது சந்திரசேகரனுக்கு எதிராக 204 வாக்குகளும் எதிர்த்து 10 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து எஸ்.ஏ. சந்திரசேகரன் உடனே விலக வேண்டும் என்று கேயார் கூறினார். இதற்கு பதிலளித்து எஸ்.ஏ.சந்திரசேகரன் நேற்று அளித்த பேட்டி:
28.10.2012 அன்று கூட்டப்பட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் தயாரிப்பா ளர் சங்கத்தால் நடத் தப்பட்ட கூட்டம் அல்ல. எங்களை எதிர்த்து வாக்களித்த கேயார் அணியைச் சேர்ந்தவர்கள் கூட்டிய கூட்டம் அது. 215 பேரைத்தான் அவர் களால் கூட்ட முடிந்தது. அப்படி கூட்டப்பட்ட எதிரணியைச் சேர்ந்தவர்கள், எங்களுக்கு எதிராக எப்படி வாக்களிப்பார்கள்? அந்த தேர்தலில் கேயார் அணிக்கு ஆதரவாக இருந்த 300 உறுப்பினர்கள், இப்போது 204 ஆக குறைந்து விட்டார்கள். எங்கள் நிர்வாகம் செய்து வரும் நல்ல விஷயங்களால் அந்த அணியினர் மிகவும் பயப்படுகிறார்கள்.
தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், இரண்டு ஆண்டுகள் சங்க நிர்வாகத்தில் இருந்து பணிபுரியலாம் என்பது சங்கத்தின் விதி. எங்களை நிம்மதியாகப் பணியாற்ற விடாமல், பிரச்னை செய்கிறார்கள். சங்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கிறார்கள். தீபாவளிக்கு நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவலாம் என்றால் அதை தடுக்கிறார்கள். பொங்கலுக்கும் இதுபோல் நடந்தது. அவர்களின் எதிர்ப்பையும் மீறி உதவி செய்தோம்.
இன்னும் ஒரு மாதத்தில் முறைப்படியான பொதுக்குழு கூட்டப்படும். அதில், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும். மீண்டும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால், அடுத்த தேர்தலில் கேயார் எந்தப் பதவிக்குப் போட்டியிடுகிறாரோ, அந்தப் பதவிக்கு அவரை எதிர்த்து போட்டியிடுவேன். கேயார் அணிக்கு 204 வாக்குகளா, எங்கள் அணிக்கு 500 வாக்குகளா என்பதை தயாரிப்பாளர்களே முடிவு செய் யட்டும். அவர்கள் என்ன முடிவு செய்தாலும், நாங்கள் கட்டுப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல்: எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். போட்டி; இன்று வேட்பு மனு தாக்கல்
» தயாரிப்பாளர் சங்க விவகாரம்: எஸ்.ஏ.சந்திரசேகரன் - கேயார் ஆதரவாளர்கள் மோதல்
» தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum