இந்திய கிரிக்கெட் வீரர் வீரட் கோலிக்கு போட்டி ஊதியத்தின் 50 சதவீதம் அபராதம்
Page 1 of 1
இந்திய கிரிக்கெட் வீரர் வீரட் கோலிக்கு போட்டி ஊதியத்தின் 50 சதவீதம் அபராதம்
அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸட் கிரிக்கெட் போட்டியின்போது கை நடுவிரலை உயர்த்தி ரசிகர்களிடம் கோபத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் வீரட் கோலிக்கு போட்டி ஊதியத்தின் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் நடைபெறும் இப்போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இவ்வாறு அவமரியாதையாக நடந்துகொண்டார் கோலி. இன்று காலை போட்டி மத்தியஸ்தரான ரஞ்சன் மடுகல்ல இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.
அணி முகாமையாளர் ஷிவ்லால் யாதவ் சகிதம் விசாரணையில் பங்குபற்றிய கோலி குற்றத்தை ஒப்புககொண்டார். அதையடுத்து அவருக்கு போட்டி ஊதியத்தின் 50 சதவீதத்தை அபராதமாக விதித்தார் ரஞ்சன் மடுகல்ல.
எல்லைக்கோட்டின் அருகே கோலி களத்தடுப்பிலிருந்தபோது மேற்படி சம்பவம் நடைபெற்றது. தான் முன்னெப்போதும் கேட்டிராத வகையில், ரசிகர்கள் தன்னை மிக அவதூறான வார்த்தைகளால் பேசியதாக கோலி தெரிவித்துள்ளார்.
‘கிரிக்கெட் வீரர்கள் இப்படி பதிலடி கொடுக்கக்கூடாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், உங்கள் தாயாரையும் சகோதரியையும் பற்றி மோசமாக பேசும்போது என்ன செய்வது?’ என கோலி கூறியுள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நடுவருடன் வாக்குவாதம்: மஹேலவுக்கு 10 சதவீதம் அபராதம்
» இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணி வீரர் ரணில் அபேநாயக்க மறைவு
» கிரிக்கெட் வீரர் கங்குலி சினிமாவில் நடிக்கிறாரா?!
» ஆஸ்திரேலிய ஆர்டர் விருதைப் பெற்ற 3வது கிரிக்கெட் வீரர் சச்சின்!
» பிரகாஷ்ராஜின் படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum