தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூப்பர் ஓவரில் டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்

Go down

சூப்பர் ஓவரில் டெல்லியை வீழ்த்தியது பெங்களூர் Empty சூப்பர் ஓவரில் டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்

Post  ishwarya Sat May 04, 2013 12:42 pm

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 21-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரில் தொடங்கியது. இதில் பெங்களூர்- டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி டெல்லி அணியின் வார்னர்- சேவாக் களம் இறங்கினார்கள். வார்னர் 15 ரன்களிலும், சேவாக் 25 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த ஜுனேஜா 17, ஜெவர்த்தனே 28 ரன்களிலும் வெளியேறினர். கடைசியில் வந்த பதான் 8 பந்தில் 19 ரன் விளாச டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டு 152 ரன் எடுத்தது.

பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ராகுல் 12, கெய்ல் 13 ரன்களில் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த கோலி- டி வில்லியர்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் அணியை வெற்றி பெற செய்வார்கள் என்ற நிலையில் டிவில்லியர்ஸ் 39 ரன்களில் ரன்அவுட் ஆகி வெளியேறினார்.

அப்போது பெங்களூர் அணி 16 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன் எடுத்திருந்தது. அப்போது பெங்களூர் அணி வெற்றி பெற 24 பந்தில் 24 ரன் தேவைப்பட்டது. 7 விக்கெட் கைவசம் இருந்தது. ஆனால் அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக 20 ஓவர் முடிவில் 152 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டையில் முடிந்தது. ஆகவே, வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. கெய்ல்- டி வில்லியர்ஸ் களம் இறங்கினார்கள். உமேஷ் யாதவ் பந்து வீசினார். முதல் பந்தில் கெய்ல் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் டி வில்லியர்ஸ் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் கெய்ல் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தை டி வில்லியர்ஸ் மிஸ் செய்தார். இதனால் 4 பந்தில் 3 ரன்கள் மட்டுமே பெங்களூர் அணி எடுத்திருந்தது. 5-வது பந்தில் டிவில்லியர்ஸ் டீப் மிட்விக்கெட் திசையில் அருமையாக சிக்ஸ் தூக்கினார். 6-வது பந்தையும் அதேபோல் சிக்சர் தூக்கினார். இதனால் பெங்களூர் அணி 15 ரன் எடுத்தது.

அடுத்து 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வார்னர்- ரோரேர் களம் இறங்கினார்கள். ராம்பவுல் பந்து வீசினார். முதல் பந்திலேயே வார்னர் அவுட் ஆனார். ஆப் சைடு அடித்த பந்தை பாயிண்ட் திசையில் கெய்ல் அருமையாக கேட்ச் பிடித்தார். இரண்டாவது பந்தை சந்தித்த பதான் பவுண்டரி அடித்தார். 3-வது பந்தில் பதான் ரன் அடிக்கவில்லை. 4-வது பந்தில் பதான் அருமையான சிக்சர் ஒன்று அடித்தார். 5-வது பந்தில் ஒரு ரன் அடித்தார். 6-வது பந்தை ரோரேர் சந்தித்தார். கடைசி பந்திற்கு 5 ரன் தேவைப்பட்டது. ராம்பவுலின் அருமையான யார்க்கரில் ரோரேட் கிளீன் போல்டானார். இதனால் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது பெங்களூர்
» ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை நசுக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
» கெய்ல் அதிரடியால் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர்
»  சூப்பர் ஓவரில் ராம்பால் சிறப்பாக வீசினார்: வீராட் கோலி பாராட்டு
» கடைசி 6 ஓவரில் ஆட்டத்தை இழந்தோம்: வீராட் கோலி வேதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum