கெய்ல் அதிரடியால் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர்
Page 1 of 1

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 12-வது லீக் இன்று பெங்களூரில் நடைபெற்றது. இதில் பெங்களூர்- கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணியைச் சேர்ந்த பிஸ்லா- காம்பீர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். பிஸ்லா 1 ரன் எடுத்த நிலையில் ஹென்றிக்யூஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு காம்பீர் உடன் காலிஸ் ஜோடி சேர்ந்தார். இவர் 16 ரன் எடுத்த நிலையில் வினய்குமார் பந்தில் ஆட்டம் இழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு காம்பீருடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார். இவரும் 17 ரன்கள் எடுத்து விரைவில் ஆட்டம் இழந்தார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் காம்பீர் அருமையாக விளையாடி அரை சதம் அடித்தார். மேலும், 9 ரன்கள் எடுத்து 59 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்கள் எடுக்க கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன் எடுத்தது.
பின்னர் 155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியைச் சேர்ந்த அகர்வால்- கெய்ல் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். அகர்வால் 9 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து 2-வது விக்கெட்டுக்கு கெய்ல் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். கோலி 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். இருவரும் அணியை வெற்றி நோக்கி எடுத்துச் சென்றனர். இதனால் 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெய்ல் 85 ரன்களும், டி வில்லியர்ஸ் 22 ரன்களும் எடுத்து அவுட்டாகமல் இருந்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது
» ஜடேஜா அதிரடியால் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தியது
» 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா
» 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை
» டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum