தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது பெங்களூர்

Go down

 ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது பெங்களூர்  Empty ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது பெங்களூர்

Post  ishwarya Sat May 04, 2013 12:29 pm

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூர் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த வாட்சன்- ரகானே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வாட்சன் 6 ரன்னிலும், ரகானே 14 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு டிராவிட்- பின்னி ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 66 ரன்னாக இருக்கும்போது பின்னி 33 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அனதபின் 4-வது விக்கெட்டுக்கு டிராவட்டுடன் ஹாட்ஜ் ஜோடி சேர்ந்தார். டிராவிட் 35 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க ராஜஸ்தான் அணி 19.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் வினய்குமார், ஆர்.பி.சிங் தலா 3 விக்கெட்டுகளும், ராம்பவுல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூர் அணி பேட்டிங் செய்து. கெய்ல்- தில்சன் தொடக்க வீரர்களாக இறங்கினார்கள். இருவரும் பெங்களூர் அணிக்கு சிறப்பாக தொடக்கம் கொடுத்தனர்.

பெங்களூர் அணியின் ஸ்கோர் 53 ரன்னாக இருக்கும்போது தில்சன் 25 ரன்னில் வாட்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து விராட் கோலி, கெய்ல் உடன் ஜோடி சேர்ந்தார். கோலி 1 ரன் எடுத்த நிலையில் பால்க்னர் பந்தில் கிளீன்போல்டாகி வெளியேறினார். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு டிவில்லியர்ஸ் வந்தார். இவர் 7 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

4-வது விக்கெட்டுக்கு கெய்ல் உடன் திவாரி ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் கெய்ல் நிலைத்து நின்று விளையாடினார். இதனால் பெங்களூர் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 123 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கெய்ல் 49 ரன்னுடனும், திவாரி 25 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

ராஜஸ்தான் அணி சார்பில் வாட்சன் 2 விக்கெட்டும், பால்க்னர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  யூசுப் பதான், காலிஸ் ஆட்டத்தால் ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா
» சூப்பர் ஓவரில் டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்
» கெய்ல் அதிரடியால் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர்
» வாட்சன் அதிரடியால் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தியது ராஜஸ்தான்
»  பெங்களூர் பாரில் ரஜினி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum