சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?: ராஜஸ்தானுடன் நாளை மோதல்
Page 1 of 1

ஐ.பி.எல். போட்டியில் 2 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 86 ரன்னிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட்டிலும் வென்றது.
மும்பை இந்தியன்சிடம் 9 ரன்னிலும், புனே வாரியர் சிடம் 24 ரன்னிலும் தோற்றது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது `லீக்' ஆட்டத்தில் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது.
சென்னை அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி, கொல்கத்தா அணிகளை அடுத்தடுத்து வென்ற சென்னை அணி ராஜஸ்தானை வீழ்த்தி `ஹாட்ரிக்' முத்திரையை பதிக்குமா? என்ற ஆவலில் சென்னை ரசிகர்கள் உள்ளனர். சேப்பாக்கத்தில் இந்த ஐ.பி.எல். சீசனில் சென்னை அணி 2 ஆட்டத்தில் தோற்றுவிட்டது.
ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றது. இதனால் உள்ளூர் மைதானத்தை தனக்கு சாதகமாக சென்னை அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தென்ஆப்பிரிக்க வீரர் டுபெலிசிஸ் அணியில் இணைந்து உள்ளார். அவர் நாளைய ஆட்டத்தில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு வாய்ப்பு வழங்கினால் மாரிஸ் அல்லது அல்பி மார்கல் நீக்கப்படலாம். வெற்றி அணி போதும் என்று டோனி கருதினால் அணியில் மாற்றம் இருக்காது. ஜடேஜா சென்னை அணியின் துருப்பு சீட்டாக உள்ளார்.
சென்னை அணியை போலவே ராஜஸ்தான் ராயல்சும் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியில் கேப்டன் டிராவிட், வாட்சன், ரகானே, ஹோட்ஜே போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் 5-வது வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சேப்பாக்கத்தில் நாளை புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
» டெல்லி அணியுடன் நாளை மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பெறுமா?
» கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதிக்கம் நீடிக்குமா?-பஞ்சாப்புடன் நாளை மோதல்
» ராஜஸ்தான் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?: புனேவுடன் இன்று மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum