தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘கொலைவெறி’ க்கு ரஜினி ஆடவில்லை !

Go down

‘கொலைவெறி’ க்கு ரஜினி ஆடவில்லை ! Empty ‘கொலைவெறி’ க்கு ரஜினி ஆடவில்லை !

Post  ishwarya Tue Apr 09, 2013 4:56 pm

‘WHY THIS KOLAVERI’ என்ற பாடல் தான் இந்தியாவின் ஹாட் டாப்பிக். இந்தப் பாடல் தனுஷ் நடித்து வரும் ‘ 3 ‘ படத்தில் இடம்பெற்று இருக்கிறது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினியின் மகள் இயக்குனர், கமலின் மகள் நாயகி என வாரிசுகள் இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

WHY THIS KOLAVERI பாடல் 3 படத்தில் தனுஷ் பாடுவது போல் ஒரு முறையும், ரஜினியை நடனமாட வைத்து ஒரு முறையும் இடம் பெற இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து 3 படக்குழுவினரிடம் விசாரித்ததில் ” ரஜினியை இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க கூட நாங்கள் நினைக்கவில்லை. மீடியாக்காரர்கள் தங்களுக்கு தோன்றுவதை எழுதி வருகிறார்கள்.

கெஸ்ட் ரோலில் கூட நடிக்க வைக்க கூட எண்ணம் இல்லாத போது எப்படி பாடலுக்கு நடனமாட சொல்வோம். இம்மாத இறுதியில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. அதில் ரஜினி, கமல் இருவரையும் அழைப்பதா வேண்டாமா என்பது குறித்தே அப்போது தான் முடிவு செய்வோம் ” என்று தெரிவித்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum