தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சசிகுமாரின் குட்டிப் புலி படத்தின் கதை

Go down

 சசிகுமாரின் குட்டிப் புலி படத்தின் கதை  Empty சசிகுமாரின் குட்டிப் புலி படத்தின் கதை

Post  ishwarya Fri May 03, 2013 5:19 pm



சுந்தரபாண்டியன் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் குட்டிப் புலி. புலி என்றதும் ஆக்ஷன் ஏரியாவில்தான் கண்களும் மனசும் அலைபாயும். ஆனால் படத்தின் கதை சென்டிமெண்ட் ஏரியாவில் சுழல்கிறது.

யாரிடம் பட்ட கடனையும் அடைத்துவிடலாம். உன்னை தூக்கி வளர்த்த தாய்க்கும், தாங்கிப் பிடிக்கிற மனைவிக்கும் பட்ட கடன்களை மட்டும் அடைக்கவே முடியாது. உயிர் போகிறவரை ஒருவன் அவர்களிடம் ஒருவன் கடன்பட்டே இருக்கிறான். இதுதான் குட்டிப்புலி சொல்கிற சேதியாம்.

சுந்தரபாண்டியனின் வெற்றிக்குப் பிறகு சசிகுமார் படத்துக்கு தமிழகம் முழுவதும் நல்ல மார்க்கெட் உருவாக்கியிருக்கிறது. அவரின் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசு தர விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார்கள். சென்ற வருடம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தந்த கால் டஜன் படங்களில் சுந்தரபாண்டியனும் ஒன்று. சராசரியாக நான்கிலிருந்து ஐந்து கோடி நடிப்பதற்காக சசிகுமாருக்கு தரப்படுகிறது (சிலர் 7 கோடி என்றும் கூறுகிறார்கள்).

குட்டிப் புலியில் சசிகுமார் ஜோடியாக சுந்தரபாண்டியனில் நடித்த லட்சுமி மேனனே நடித்துள்ளார். சசியின் முன்னாள் அசிஸ்டெண்ட் முத்தையா படத்தை இயக்கியுள்ளார். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum