குட்டி புலி'யான சசிகுமார்
Page 1 of 1
குட்டி புலி'யான சசிகுமார்
சற்குணம் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டி சிறந்த மாநில மொழி படத்திற்கான தேசிய விருதை பெற்ற 'வாகை சூட வா' படத்தை தயாரித்த எஸ்.முருகானந்தம் தனது இரண்டாவது படமாக 'குட்டி புலி' என்ற படதை தயாரிக்கிறார். இதில் ஹீரோவாக இயக்குநர் சசிகுமார் நடிக்கிறார். 'வில்லேஜ் தியேட்டர்ஸ் (பி) லிமிடெட்' நிறுவனத்தின் சார்பில் எஸ்.முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்தை முத்தையா என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் தமிழச்சி அசோகன், டி.பி.கஜேந்திரன், பூபதி பாண்டியன் ஆகிய இயக்குநர்களிடன் உதவியாளராக பணிபுரிந்திருக்கிறார். பெண்மையின் வலிமையையும், தியாகத்தையும், தூய்மையையும் மையமாக கொண்டு அழுத்தமான திரைக்கதையுடன் 'குட்டி புலி' என்ற கதாபாத்திரத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார். மற்ற நடிக-நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். 'வாகை சூட வா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகரை கதைகளமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் துவங்குகிறது. என்னாச்சு.. இந்த புலிக்கு அரசியல் எதிர்காலம் இருக்குமோ...? வர வர டைட்டில் போர்டெல்லாம் பட்டய கிளப்புதே...!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உங்களுக்காகவே குட்டி குட்டி “டிப்ஸ்” கவலைய விடுங்கள்.
» குட்டி… படு கெட்டி!!
» சசிகுமார் தயாரிக்கும் சுந்தரபாண்டியன்
» சுந்தரபாண்டியனான சசிகுமார்!
» ரஜினி ஸ்டைலில் சசிகுமார்
» குட்டி… படு கெட்டி!!
» சசிகுமார் தயாரிக்கும் சுந்தரபாண்டியன்
» சுந்தரபாண்டியனான சசிகுமார்!
» ரஜினி ஸ்டைலில் சசிகுமார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum