ஆந்திராவில் மருந்து கடை அதிபரை கடத்தி கொலை: 9 பேர் கைது
Page 1 of 1

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தாதிபத்ரி நகரைச் சேர்ந்தவர் வாசுராவ் பிரசாத். மருந்து கடை உரிமையாளர்.
இவர் கடந்த 17-ந்தேதி மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். மறுநாள் சந்திரவள்ளி என்ற இடத்தில் அவர் பிணமாக கிடந்தார். அவரது உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு கிடந்தது.
அவர் அணிந்து இருந்த தங்க நகை மற்றும் பணம், பொருள் கொள்ளை போய் இருந்தது. இதனால் அவர் பணத்துக்காக கடத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில் வாசுராவ் பிரசாத்தை கடத்தி கொன்ற கும்பல் சிக்கியது. கொலையாளிகள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் என்பது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது.
கைதான என்ஜினீயரிங் மாணவர்கள் வருமாறு :-
1. நரேந்திரகுமார், 2. ஹர்சா, 3.கிரண்குமார் ரெட்டி, 4. மகேஷ்குமார் ரெட்டி, 5. அசோக்குமார் ரெட்டி.
போதை பழக்கத்துக்கு அடிமையான இவர்கள் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடத்தல் கும்பலுடன் சேர்ந்து கொள்ளைகளில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களை பிரபல சந்தன கடத்தல் மன்னன் சுனில் குமார் என்பவர் வழி நடத்தி உள்ளார்.
இவர்கள் அனைவரும் பணத்துக்காக மருந்துக்கடை அதிபர் வாசுராவ் பிரசாத்தை கடத்தினர். அவர் அணிந்து இருந்த நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் பணத்தை பறித்தனர். மேலும் பணம் கேட்டு அடித்து சித்ரவதை செய்தனர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
கொலையை மறைக்க அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து தலைமறைவாகி விட்டனர்.
கைதான மாணவர்களில் அசோக்குமார் ரெட்டி ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனது படிப்பு செலவுக்கு மருந்து கடை அதிபர் வாசுராவ் பிரசாத்தான் சிறு வயது முதலே உதவி செய்து வருகிறார். என்ஜினீயரிங் கல்லூரியிலும் அவர் உதவியுடன்தான் படித்து வந்தார். ஆனால் தகாத நண்பர்களின் சேர்க்கையால் தன்னை வளர்த்து ஆளாக்கியதை மறந்து வாசுராவ் பிரசாத்தை கொலை செய்ய துணை புரிந்து உள்ளார்.
அவரை பிடித்து விசாரித்தபோது தான் போலீசாருக்கு அனைத்து உண்மைகளும் தெரிய வந்தது. அவன் மூலம் மற்ற கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆந்திராவில் இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது
» பெண்ணை கடத்தி 3 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!
» மதுரவாயலில் வாலிபர் கொலை: போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது
» ஆந்திராவில் ஆலங்கட்டி மழைக்கு 2 பேர் பலி
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum