தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மதுரவாயலில் வாலிபர் கொலை: போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது

Go down

மதுரவாயலில் வாலிபர் கொலை: போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது Empty மதுரவாயலில் வாலிபர் கொலை: போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது

Post  ishwarya Thu May 02, 2013 6:16 pm

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா, மேல் ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன் (வயது 30). திருமணமாகி அஞ்சலை என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளன. கூலி வேலை செய்த தயாளனுக்கு குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார்.

குமணஞ்சாவடியில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் மதுர வாயல் பாலத்திற்கு அடியில் வெட்டு காயங்களுடன் தயாளன் பிணமாக கிடந்தார். அவரது பிணத்தை கோயம்பேடு போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

தயாளனை கொன்றது யார்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. தயாளனின் மனைவி அஞ்சலையிடம் நடத்திய விசாரணையில் நிலத் தகராறில் அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது.

தயாளன் சொந்த ஊரில் உள்ள நிலத்துக்கு அருகில் அரங்கநாயகம் என்பவர் நிலம் உள்ளது. 60 சென்ட் நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. அரங்கநாயகத்தை தயாளன் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தயாளன் கொலை செய்யப்பட்டதற்கு நிலத்தகராறு முன்விரோதமே காரணம் என போலீசார் முடிவுக்கு வந்தனர். இந்த கொலையை 6 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு செய்திருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்த கொலையில் முக்கிய புள்ளியாக ராஜமங் கலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி போலீஸ்காரர் முருகன் செயல்பட்டது தெரியவந்தது. கொலை திட்டத்தை 5 பேருடன் அவர் நிறைவேற்றியுள்ளார். தனிப்படை போலீசார் திருவள்ளூரில் இன்று காலை 6 பேரையும் கைது செய்தனர்.

போலீஸ்காரர் முருகன் (வயது 39), பிரபு (30), மேல் ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (27), பால் கிறிஸ்டோபர் (23), சுரேஷ் (21) இவர் ஒரு கல்லூரி மாணவர், பிருதிவிராஜ் (19) ஆகிய 6 பேரும் சேர்ந்து தயாளனை தீர்த்து கட்டியுள்ளனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மேல் ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த அரங்க நாயகத்தின் அண்ணன்தான் போலீஸ்காரர் முருகன் ஆவார். தனது குடும்ப எதிரியை சென்னையில் தீர்த்து கட்ட அவர் பிரபுவின் உதவியை நாடியுள்ளார். பிரபுவும் தயாளனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் நண்பர்கள். அதனால் அவர் மூலம் எளிதாக கொலை திட்டத்தை நிறைவேற்ற முருகன் முடிவு செய்தார்.

சம்பவத்தன்று பிரபுவும் தயாளனும் குமணஞ்சாவடியில் ஒன்றாக மது குடித்தனர். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளிலில் மதுரவாயல் வந்தனர். இரவு 11 மணியளவில் அங்கு வந்த தயாளன் சிறுநீர் கழிப்பதற்காக பாலத்திற்கு அருகில் சென்றார். அப்போது திட்டமிட்டப்படி ஆயுதங்களுடன் அங்கு நின்ற முருகன், பாலாஜி, பால் கிறிஸ்டோபர், சுரேஷ், பிருதிவிராஜ் ஆகியோர் தயாளனை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது.

தங்களது கொலை வெறித்திட்டம் முடிந்த பிறகு அவர்கள் தலைமறைவாகி விட்டனர். பின்னர் போலீஸ் பிடியில் சிக்கி கொண்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் எழும்பூர் 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
» மரக்காணம் கலவரத்தின் போது வாலிபர் மர்மமாக இறந்தது கொலை வழக்காக மாற்றம்
» தகாதஉறவால் அண்ணியை கத்தியால் குத்தியவர் உள்பட 3 பேர் கைது!
» இருட்டறை நிகழ்ச்சியில் பெண்களிடம் சில்மிஷம்: என்ஜினியர் உள்பட 2 பேர் கைது
» திருப்பரங்குன்றத்தில் ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum