தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது

Go down

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது  Empty மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது

Post  ishwarya Fri May 24, 2013 4:48 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் ஸ்ரீமாணிக¢கநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் காளைகள் முட்டியதில் முத்துச்சாமி (35), ஆண்டி (35), அன்புச்செல்வம் (29) ஆகியோர் பலியாயினர். 60 பேர் படுகாயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டின்போது அனுமதியின்றி 300க்கும் மேற்பட்ட காளைகளை கட்டுமாடாக அவிழ்த்து விட்டுள்ளனர். மேலும் அனுமதி பெற்ற நபர்க ளோடு அனுமதி பெறாத நூற்றுக்கணக்கானோர் காளைகளை அடக்க முயன்றுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லாதது மற்றும் அனுமதியின்றி ஏராளமான காளைகளை களமிறக்கியதே 3 பேர் பலியான தற்கும், 60 பேர் காயமடைந்ததற்கும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதனால் மஞ்சுவிரட்டை நடத்திய விழாக¢குழுவை சேர்ந்த ஒருங்கி ணைப்பாளர் அம்பலத்தரசு, சின்னையா, காளிமுத்து, நாகப்பன், ராஜா, கருப்பையா, ரமேஷ், சூரியன், சுப்பிரமணியன், லட்சுமணன், மணியரசன் ஆகியோர் மீது திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அனுமதி பெறா மல் மாடுகளை அவிழ்த்து விட்ட சருகவலையப்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை, ஆண்டிச்சாமி, மதுரையை சேர்ந்த சரவணன், மேலூரை சேர்ந்த மகேஷ், கோமாளிப்பட்டியை சேர்ந்த மயில்சாமி, ரணசிங்கபுரத்தைசேர்ந்த நாகராஜன், கருங்குளத்தைச் சேர்ந்த மாதவன் ஆகியோர் மீதும் வழக¢குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் சின்னையா, பாண்டித்துரை, ஆண்டிச்சாமி, சரவணன், மகேஷ், மயில்சாமி, நாகராஜன், மாதவன் ஆகிய 8 பேரை கைது செய்து, திருப்புத்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்களை மாஜிஸ்திரேட் முத்துக¢குமரன் 15 நாள் காவலில் வைக¢க உத்தரவிட்டார். இதையடுத்து 8 பேரையும் திருப்புத்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரவாயலில் வாலிபர் கொலை: போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது
» தகாதஉறவால் அண்ணியை கத்தியால் குத்தியவர் உள்பட 3 பேர் கைது!
»  நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அரசு பஸ், லாரி மீது மோதல்: டிரைவர் பலி மாணவ–மாணவிகள் உள்பட பயணிகள் 17 பேர் காயம்
» இருட்டறை நிகழ்ச்சியில் பெண்களிடம் சில்மிஷம்: என்ஜினியர் உள்பட 2 பேர் கைது
» தாய்லாந்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: குழந்தை உள்பட 6 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum