ஆந்திராவில் ஆலங்கட்டி மழைக்கு 2 பேர் பலி
Page 1 of 1
ஆந்திராவில் ஆலங்கட்டி மழைக்கு 2 பேர் பலி
ஆந்திராவில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்தது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியதால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். இந்த நிலையில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் சித்தூர், கர்னூல், அனந்தபுரம், ரங்காரெட்டி ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. சாலையில் பனிக்கட்டிகள் விழுந்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சித்தூர் மாவட்டத்தில் இடி தாக்கி 2 பேர் பலியானார்கள். மாலேபாடு கிராமத்தில் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த 13 வயது சிறுமி பல்லவி மழை பெய்ததும் அருகில் உள்ள மரத்தின்கீழே ஒதுங்கினாள். அப்போது இடிதாக்கி அவள் உயிர் இழந்தாள்.
இதே போல் தடிக்காயல பள்ளி கிராமத்தில் விவசாயி பலராம் தக்காளி வயலில் களை பறித்துக் கொண்டு இருந்தார். திடீர் என பெய்த மழையால் அருகில் உள்ள மரத்தின் கீழ் ஒதுங்கினார். அப்போது மரத்தில் இடி தாக்கியது. இதில் விவசாயி பலராம் பரிதாபமாக இறந்தார்.
மும்பை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்னூல் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் பல கிராமங்களில் மின்சாரம் தடைப்பட்டது.
அனந்தபுரம் மாவட்டத்தில் இடிதாக்கி 15 ஆடுகள் பலியானது. மழையால் காய்த்து குலுங்கிய மாமரங்களில் அனைத்து காய்களும், பிஞ்சுகளும் கொட்டியது. ரங்காரெட்டி மாவட்டத்தில் காய வைத்திருந்த மஞ்சள், வேர்கடலை மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. ஐதராபாத் நகரிலும் பல இடங்களில் சுமார் 2 மணி நேரம் மழை கொட்டியது. திடீர் மழையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆந்திராவில் இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது
» ஆந்திராவில் மருந்து கடை அதிபரை கடத்தி கொலை: 9 பேர் கைது
» மழைக்கு ஒரு மடல்
» கல்வி சுற்றுலா சென்றபோது பரிதாபம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி; 35 பேர் படுகாயம்
» மழைக்கு ஒதுங்கிய கவிதைகள்
» ஆந்திராவில் மருந்து கடை அதிபரை கடத்தி கொலை: 9 பேர் கைது
» மழைக்கு ஒரு மடல்
» கல்வி சுற்றுலா சென்றபோது பரிதாபம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி; 35 பேர் படுகாயம்
» மழைக்கு ஒதுங்கிய கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum