தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உகாண்டா கிளர்ச்சி குழு தலைவரை பிடித்து கொடுத்தால் ரூ.62 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

Go down

உகாண்டா கிளர்ச்சி குழு தலைவரை பிடித்து கொடுத்தால் ரூ.62 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு Empty உகாண்டா கிளர்ச்சி குழு தலைவரை பிடித்து கொடுத்தால் ரூ.62 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

Post  ishwarya Tue Apr 30, 2013 5:03 pm

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் 'போர்க்குற்ற பரிசுத்தொகை திட்டத்தில்' புதிதாக உகாண்டா நாட்டைச் சேர்ந்த கிளர்ச்சி குழுவின் தலைவர் ஜோசப் கெனியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 62 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவைச் சேர்ந்த 3 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜோசப் கெனி உகாண்டாவில் கடவுளின் எதிர்ப்புப் படை (லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி) என்ற கிளர்ச்சிக் குழுவை அமைத்து அரசுக்கு எதிராக பல தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கெனியின் தீவிரவாத நடவடிக்கைகள் 4 நாடுகளில் பரவி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் மீது குழந்தை கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்கள் சாட்டப்பட்டு, உலக அளவில் தேடப்பட்டு வந்தார்.

இவர் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் காடுகளில் மறைந்திருப்பதாகக் கூறி அமெரிக்கா மற்றும் உகாண்டா அரசு தேடுதல் வேட்டையை நடத்தி வந்தது.

ஆனால் தற்போது மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் நடந்து வந்த உள்நாட்டு போர்களில் கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு தலைநகரை கைப்பற்றினர். இதனால் அமெரிக்கா தேடுதல் வேட்டையை நிறுத்தி விட்டு, இந்த பரிசு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி கலவர வழக்கில் விடுதலையான சஜ்ஜன்குமாரை தண்டிக்க ஆதாரம் உள்ளதா?: ரூ.5 1/2 கோடி பரிசு அறிவிப்பு
» 21-ம் நூற்றாண்டின் முக்கிய நட்புறவுகளில் இந்திய-அமெரிக்கா நட்பு குறிப்பிடத்தக்கது - அமெரிக்கா அறிவிப்பு
» ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு!
» பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் ஸ்வேதா திவாரி வெற்றி- ரூ. 1 கோடி பரிசு
» சரப்ஜித் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி: பஞ்சாப் அரசு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum