21-ம் நூற்றாண்டின் முக்கிய நட்புறவுகளில் இந்திய-அமெரிக்கா நட்பு குறிப்பிடத்தக்கது - அமெரிக்கா அறிவிப்பு
Page 1 of 1
21-ம் நூற்றாண்டின் முக்கிய நட்புறவுகளில் இந்திய-அமெரிக்கா நட்பு குறிப்பிடத்தக்கது - அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஆசிய சமூக கூட்டமைப்பில் கலந்துகொண்டு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டொனிலான் உரையாற்றினார்.
அப்போது இந்தியாவின் நட்பு குறித்து டாம் டொனிலான் பேசியதாவது:-
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் அமெரிக்காவின் நட்பானது, 21-ம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் என அதிபர் ஒபாமா தீர்மானிக்கிறார். ஆசிய-பசிபிக் பிராந்தியந்தின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்தியாவுடன் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்.
தென்கிழக்கு ஆசியாவின் பர்மா பிரச்சினை, ஜப்பான் கடல் பகுதியின் பாதுகாப்பு அதிகரிப்பது போன்ற பிரச்சினையில் இந்தியா காட்டும் ஆர்வத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்த பிராந்தியத்தில் பொருளாதார வெளிப்படை தன்மை, பிரச்சினைகளுக்கு அமைதி தீர்வு, உலகளாவிய உரிமைகள், சுதந்திரத்தை மதித்தல் ஆகிய விசயங்களில் அமெரிக்காவும் ஆர்வம் காட்டும்.
இதற்காக, அமெரிக்காவின் அனைத்து அம்சங்களும் அதாவது ராணுவம், அரசியல், வர்த்தகம், முதலீடு மற்றும் நமது மதிப்புகள் ஆகியவை இணைந்து செயலாற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» உகாண்டா கிளர்ச்சி குழு தலைவரை பிடித்து கொடுத்தால் ரூ.62 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு
» அமெரிக்கா அமெரிக்கா
» அமெரிக்கா அமெரிக்கா
» இருபதாம் நூற்றாண்டின் இந்திய சினிமா
» அமெரிக்கா : பல அரிய தகவல்கள்
» அமெரிக்கா அமெரிக்கா
» அமெரிக்கா அமெரிக்கா
» இருபதாம் நூற்றாண்டின் இந்திய சினிமா
» அமெரிக்கா : பல அரிய தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum