ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு!
Page 1 of 1
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு!
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் இந்திய பாட்மிண்டன் வீரர்கள், வீராங்கனைகளுக்கு, ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய பாட்மிண்டன் வாரியம் அறிவித்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 16 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் தொடர்புடையை மொத்தம் 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்திய பாட்மிண்டன் அணியின் சார்பாக சாய்னா நேவால், ஜூவாலா கட்டா, டிஜூ, காஷ்யப், அஷ்வினி பொன்னப்பா என்று மொத்தம் 5 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் சாய்னா நேவால் மீது பதக்கம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறும் இந்திய வீரர் அல்லது வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய பாட்மிண்டன் வாரியம் நேற்று பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய பாட்மிண்டன் வாரியத் தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் இந்தியருக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.50 லட்சமும், வெண்கலம் பெற்றால் ரூ.25 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் ஸ்வேதா திவாரி வெற்றி- ரூ. 1 கோடி பரிசு
» உகாண்டா கிளர்ச்சி குழு தலைவரை பிடித்து கொடுத்தால் ரூ.62 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு
» டெல்லி கலவர வழக்கில் விடுதலையான சஜ்ஜன்குமாரை தண்டிக்க ஆதாரம் உள்ளதா?: ரூ.5 1/2 கோடி பரிசு அறிவிப்பு
» சீன பேட்மிண்டன் அணி ஒலிம்பிக்கில் சூதாட்டமா?
» ஒலிம்பிக்கில் ரஹ்மான் இசை
» உகாண்டா கிளர்ச்சி குழு தலைவரை பிடித்து கொடுத்தால் ரூ.62 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு
» டெல்லி கலவர வழக்கில் விடுதலையான சஜ்ஜன்குமாரை தண்டிக்க ஆதாரம் உள்ளதா?: ரூ.5 1/2 கோடி பரிசு அறிவிப்பு
» சீன பேட்மிண்டன் அணி ஒலிம்பிக்கில் சூதாட்டமா?
» ஒலிம்பிக்கில் ரஹ்மான் இசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum