சண்டைக் கலைஞர்கள் ஸ்டிரைக் - பாரதிராஜா அறிக்கை
Page 1 of 1
சண்டைக் கலைஞர்கள் ஸ்டிரைக் - பாரதிராஜா அறிக்கை
சண்டைக் கலைஞர்கள் பணி பாதுகாப்பு, பிற மொழிப் படங்களில் 50 - 50 பணி வாய்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பல படப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்தையொட்டி இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘‘பணி பாதுகாப்பு மற்றும் பிறமொழி படங்களில் 50-க்கு 50 சதவீத பணி வாய்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தியும் சண்டை கலைஞர்களது கோரிக்கைகளை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்ற முடிவை சண்டை கலைஞர்கள் எடுத்திருக்கும் செய்தியை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
சண்டை கலைஞர்களுக்கு தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பணியாற்றும்போது உரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற பிரச்சினை பேசி தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல. இதை விட சிக்கலான பல பிரச்சினைகளுக்கு எல்லாம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கண்டிருப்பதை தமிழ் திரையுலகில் உள்ள மூத்த கலைஞர்கள் அனைவரும் அறிவார்கள்.
இந்தி படங்களிலும் தெலுங்கு படங்களிலும் ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை சண்டை கலைஞர்கள் தவிர்ப்பதில் நியாயமிருப்பதாக எந்த நடுநிலையாளரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
ஆகவே சண்டை கலைஞர்கள் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பில் உடனடியாக கலந்து கொண்டு தமிழ் திரையுலகில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை போக்கி இதனால் ஏற்படக் கூடிய பொருளாதார நஷ்டத்தில் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏப். 7ம் தேதி முதல் ஸ்டிரைக்: பெப்சி அறிவிப்பு! சின்னத் திரையினரும் களம் இறங்குகின்றனர்!!
» ஏப். 7-ல் பெப்சி ஸ்டிரைக்!
» பூலோகம் படத்தின் சண்டைக் காட்சிக்காக திரண்ட 6000 பேர்
» சண்டைக் காட்சியில் விபத்து – விஷாலுக்கு தலையில் பலத்த காயம்!
» விஜய்யின் ‘ஜில்லா’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்!
» ஏப். 7-ல் பெப்சி ஸ்டிரைக்!
» பூலோகம் படத்தின் சண்டைக் காட்சிக்காக திரண்ட 6000 பேர்
» சண்டைக் காட்சியில் விபத்து – விஷாலுக்கு தலையில் பலத்த காயம்!
» விஜய்யின் ‘ஜில்லா’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum