ஏப். 7-ல் பெப்சி ஸ்டிரைக்!
Page 1 of 1
ஏப். 7-ல் பெப்சி ஸ்டிரைக்!
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்சி), தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே நடைபெற்று வரும் ஊதிய உயர்வு பிரச்சினையில் எந்தவித சுமூக உடன்பாடும் ஏற்படவில்லை. தமிழக அரசு தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் தற்போது தோல்வி ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 3-ம் தேதி தொழிலாளர் கூடுதல் ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெப்சி அமைப்பினர் கலந்துகொண்டனர். ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொள்ளவில்லை. மேலும் இனி இந்த பேச்சு வார்த்தையில் தாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என்றும் கடிதம் கொடுத்ததுடன், பெப்சிக்கு எதிராக புதிய தொழிலாளர் சங்கத்தை அமைக்கப் போகிறோம் என்றும் சபதம் எடுத்திருக்கிறார்கள்.
இதனால் பெப்சி முதன் முறையாக வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது. வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் (Post Productions) வேலைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற முடிவை பொதுக்குழுவின் ஒப்புதலோடு அறிவித்திருக்கிறது. இந்த பிரச்சினை சம்மந்தமாக நேற்று (ஏப்ரல் 3) பெப்சியின் அவசர பொதுகுழு கூட்டப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பிறகு பெப்சி அமைப்பின் தலைவர் எம்.ஏ.ராமதுரை, பொதுச் செயலாளர் ஜி.சிவா, ஊதியக்குழு தலைவர் இயக்குநர் அமீர் மற்றும் பெப்சி நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். வேலை நிறுத்தத்தைப் பற்றி கூறிய செயலாளர் சிவா, "சம்பள உயர்வுக்காக நாங்கள் கடந்த ஒரு வருடமாக போராடி வருகிறோம். உண்ணாவிரதமும் இருந்தோம். ஆனால், எப்போதும் வேலை நிறுத்தத்தை நாங்கள் அறிவித்ததில்லை. தயாரிப்பாளர்கள் சங்கம் தான் சில நேரங்களில் வேலை நிறுத்தத்தையும் அறிவித்தார்கள். ஒரு மாதம் படப்பிடிப்பையும் நிறுத்தினார்கள். அதையெல்லாம் பொறுமையாக ஏற்றுக்கொண்ட எங்களுக்கு எதிராக, தற்போது புதிய சங்கம் ஒன்றை உருவாக்குவோம் என்று அறிவித்து அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் எங்களின் வாழ்வாதரத்தை காப்பாற்றிகொள்வதற்காக முதன் முறையாக இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம்." என்றார்.
இயக்குநர் அமீர் பேசுகையில், "முதலாளிகளே தொழில் சங்கம் ஆரம்பிப்பது என்பது இந்திய அரசியல் சட்டத்தின்படி குற்றமாகும். இதை அவர்கள் அறிவித்தபோதே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தொழிலாளர் கூடுதல் ஆணையரிடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கடிதம் கொடுக்க இருக்கிறோம். எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நாற்காலி சண்டை நடந்து வருகிறது. அதை தொழிலாளர்கள் மீது திருப்புகிறார்கள். தற்போது ஒரு நேர்மையான தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ் சினிமாவுக்கு தேவைப்படுகிறது." என்றார்.
இந்த பிரச்சினை சம்மந்தமாக முதல்வரை சந்தீப்பீர்களா? என்று கேட்டதற்கு, "எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை முதல்வரை சந்திப்பதுதான். முதல்வரை சந்திக்க நாங்கள் கடிதம் கொடுத்திருக்கிறோம். விரைவில் எங்களை முதல்வர் அழைப்பார் அப்போது எங்கள் தரப்பு நியாயத்தை அவரிடம் சொல்வோம். மேலும் பேச்சுவார்த்தையின் போது தயாரிப்பாளர் ஒருவர் தொழிலாளர் ஆணையரிடத்தில் அரசாங்கத்தையே நாங்கள்தான் நிர்ணயிக்கிறோம் என்று கூறினார். இதை ஆதாரத்துடன் முதல்வரிடம் பதிவு செய்வோம். இதுபோல பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள் அரசு அதிகாரிகளின் முன்னிலையிலேயே தகாதவாறு பேசியிருக்கிறார்கள். இதை அனைத்தையும் நாங்கள் ஆதாரத்துடன் முதல்வரிடம் கூற இருக்கிறோம். தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த புதிய தொழிலாளர்கள் சங்கத்தை உருவாக்குவோம் என்று கூறிய தயாரிப்பாளர்கள் சங்கம் அதை வாபஸ் வாங்க வேண்டும். அப்படி வாபஸ் வாங்கினால் வேலை நிறுத்தத்தை நாங்கள் நிறுத்திவிட்டு மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவோம்." என்று கூறிய அமீர், இந்த வேலை நிறுத்தத்தால் தொழிலாளர்களுக்கு பாதிப்பு தான் என்றாலும், எங்களுடைய உயிரே போகும் நிலை இருப்பதால் தான் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம்." என்றார். சினிமாவுல அரசியல திணிச்சு இவுங்க அடிக்கிற கூத்து இருக்கே.... கிட்டயிருந்தாங்கனா நாலு சாத்து சாத்தலாம் போலயிருக்கு...!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏப். 7ம் தேதி முதல் ஸ்டிரைக்: பெப்சி அறிவிப்பு! சின்னத் திரையினரும் களம் இறங்குகின்றனர்!!
» சண்டைக் கலைஞர்கள் ஸ்டிரைக் - பாரதிராஜா அறிக்கை
» பெப்சியை உடைக்க விடமாட்டோம்! உயிரைக்கொடுத்தாவது காப்போம் : பெப்சி!
» பெப்சி வேலை நிறுத்தம் முடிந்தது
» பெப்சி தேர்தல் - அமீர் வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum