ஏப். 7ம் தேதி முதல் ஸ்டிரைக்: பெப்சி அறிவிப்பு! சின்னத் திரையினரும் களம் இறங்குகின்றனர்!!
Page 1 of 1

வரும் 7ம் தேதி முதல் படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க இயலாததால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக பெப்சி நடத்திய பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. சின்னத்திரையை பொறுத்தவரை, வரும் 10ம் தேதி முதல் வேலை நிறுத்தம் துவங்குகிறது.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்திற்கும் (பெப்சி), தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே சம்பள உயர்வு பேச்சு வார்த்தையில் மோதல் நீடிக்கிறது. இவர்களுக்கிடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளிலும் உறுதியான தீர்வு எட்டப் படவில்லை. இந்த சூழ்நிலையில், தொழிலாளர் நல ஆணையத்திற்கு இந்த பிரச்னை கொண்டு செல்லப்பட்டது.அங்கு இருதரப்பினரையும் தனித்தனியே அழைத்து, பேச்சுவார்த்தை தொடரப்பட்ட நிலையில், நேற்று தொழிலாளர் நல ஆணையர் முன்பு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக இருந்தது. நேற்று காலை நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செல்லாத நிலையில், மாலை 6 மணியளவில் பெப்சி அமைப்பினர் அவசரமாக பொதுக்குழுவைக் கூட்டினர்.
ஊதியக்குழு தலைவர் டைரக்டர் அமீர், பெப்சி தலைவர் எம். ராமதுரை, பொதுச் செயலர் சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் உள்ளிட்டோர் தலைமையில் அனைத்து சங்கத் தலைவர்களும் ஒன்று கூடி ஆலோசித்தனர். இறுதியாக வேலை நிறுத்தத்ததை தவிர, வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்தனர்.
அமைப்பின் பொதுச் செயலர் சிவா கூறியதாவது:ஒன்றரை ஆண்டு காலமாக, ஊதிய உயர்வு தொடர்பாக, போராடி வருகிறோம். இருப்பினும், படப்பிடிப்புக்கு இடையூறாக செயல்படவில்லை. எங்களது தொழிலாளர்கள், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார உரிமைகளைக் காக்கும் வகையில், வரும், 7ம் தேதி முதல் வேலை நிறுத்தத்ததில் ஈடுபடவுள்ளோம். சின்னத்திரையினர், வரும் 10ம் தேதி, வேலை நிறுத்தத்தைத் துவக்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
பெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் தமிழ் சினிமா மீண்டும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏப். 7-ல் பெப்சி ஸ்டிரைக்!
» பெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
» ஸ்ரீகாந்த்தின் ‘சதுரங்கம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
» மாற்றான் ரிலீஸ் தேதி - அதிகாரபூர்வ அறிவிப்பு
» தனுஷின் ‘மயக்கம் என்ன’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum