தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள மலையாள நடிகர், நடிகைகள் சம்மதம்

Go down

சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள மலையாள நடிகர், நடிகைகள் சம்மதம் Empty சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள மலையாள நடிகர், நடிகைகள் சம்மதம்

Post  ishwarya Sat Apr 27, 2013 5:41 pm

கிட்டத்தட்ட ரூ. 150 கோடி நஷ்டத்தில் செயல்படும் மலையாளத் திரையுலகைக் காப்பாற்றுவதற்காக தங்களது சம்பளத்தைக் கணிசமாக குறைத்துக் கொள்வதாக மலையாள திரையுலக நடிகர் நடிகைகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மலையாள நடிகர் சங்கமான அம்மாவுக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நடந்த கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. இருப்பினும், எவ்வளவு சம்பளத்தைக் குறைப்பது என்பது இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை.

இக்கூட்டத்தில், நடிகர் சங்கம் சார்பில் அம்மா தலைவர் இன்னொசன்ட், மம்முட்டி, மோகன்லால், திலீப், முகேஷ், ஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சபு செரியன், செயலாளர் சுரேஷ் குமார் கூறுகையில், ஒரு சூப்பர் ஸ்டாரின் படத்துக்கான பட்ஜெட் ரூ. 3.5 கோடிக்கு மேல் போகக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பட்ஜெட் ரூ. 5 கோடியாக உள்ளது.

மேலும், படப்பிடிப்புத் தொடங்குவதற்கு 45 நாட்களுக்கு முன்பே படத்தின் ஸ்கிரிப்ட்டை இயக்குநரும், தயாரிப்பாளரும் சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து
» நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு
» மலையாள நடிகர் திலகன் காலமானார்
» மலையாள நடிகர் திலகன் மருத்துவமனையில் அனுமதி!
» மணிரத்தினம் படத்தில் மலையாள நகைச்சுவை நடிகர் பைஜூ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum