மலையாள நடிகர் திலகன் காலமானார்
Page 1 of 1
மலையாள நடிகர் திலகன் காலமானார்
திருவனந்தபுரம், செப். 24: பழம்பெரும் மலையாள நடிகர் திலகன் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 77.
கேரளத்தில் பிறந்த திலகன் ஆரம்பத்தில் நாடக நடிகராக கலைப் பயணத்தைத் துவக்கினார். இடதுசாரிக் கொள்கைகளை ஆதரிக்கும் கேரள மக்கள் கலை மையம் உள்பட பல்வேறு நாடகக் குழுக்களில் அவர் இணைந்து பணியாற்றினார். பின்னர் மலையாளத் திரையுலகில் நுழைந்தார். காந்தர்வ ஷேத்ரம், உள்கடல், பெரியார் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அவரது நடிப்பு பேசப்பட்டதால் முன்னணி குணச்சித்திர நடிகராக உருவெடுத்தார். மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களின் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.
கேரள அரசின் சிறந்த நடிகர் விருதை மூன்று முறை பெற்றவர் திலகன். கிரீடம், கண்ணெழுதிப் பொட்டும் தொட்டு, கிலுக்கம், பெருஞ்சித்தன், ஏகாந்தம் உள்பட 300 படங்களில் நடித்தவர் திலகன். தமிழில் சத்ரியன் உள்பட சில படங்களில் நடித்த அவருக்கு 2009-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
÷சமீப காலமாக திலகனுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை 3.35 மணியளவில் திலகனின் உயிர் பிரிந்தது. அவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மலையாள நடிகர் திலகன் மருத்துவமனையில் அனுமதி!
» பிரபல நடிகர் திலகன் கார் மோதி இரு குழந்தைகள் பலி!
» நடிகர் எம்.ஆர்.கே. காலமானார்
» நடிகர் மனோகரன் காலமானார்
» காலமானார் நடிகர் நரசிம்மன்
» பிரபல நடிகர் திலகன் கார் மோதி இரு குழந்தைகள் பலி!
» நடிகர் எம்.ஆர்.கே. காலமானார்
» நடிகர் மனோகரன் காலமானார்
» காலமானார் நடிகர் நரசிம்மன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum