தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு

Go down

நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு Empty நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு

Post  ishwarya Wed Apr 24, 2013 6:15 pm

நடிகர் சங்கத்தில் பல நடிகர், நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். சங்கத்தில் இல்லாமலேயே படங்களில் இவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நடிகர் சங்கம் நாளை (15-ந் தேதி) வரை கெடு விதித்தது. சங்கத்தில் உறுப்பின ராகாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்றும் எச்சரித்தது.

தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக சேராதவர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ஐஸ்வர்யா ராய் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் சமீபத்தில் ரிலீசான ராவணன் போன்ற தமிழ்படங்களில் நடித்துள்ளார்.

அவரும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று அதன் பொதுச் செயலாளர் ராதாரவி வற்புறுத்தினார். இந்த நிலையில் கெடுவுக்கு முன்பாகவே புதுமுக நடிகர்- நடிகைகள் பலர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.

அங்காடித் தெரு நாயகன் மகேஷ், களவாணி நாயகன் விமல் ஆகியோர் உறுப்பினராகியுள்ளார்கள். ஜெனிலியா, ஹன்சிகா, சமீரா ரெட்டி, ஓவியா போன்றோரும் உறுப்பின ராகியுள்ளனர்.

மேலும் பல நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் விண்ணப்பபடிவங்கள் வாங்கி சென்றுள்ளனர். அவற்றை பூர்த்தி செய்து நாளை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் உறுப்பினராக சேரவில்லை. உறுப்பினர் ஆகாதவர்கள் பெயர் பட்டியல் நாளை மறுநாள் (16-ந் தேதி) தயார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அடித்துப் பிடித்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த புது நடிகைகள்
» நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறது
» டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து
»  நடிகர் சங்கத்தில் ஐஸ்வர்யாராய் உறுப்பினராகிறார்
» நடிகர் சங்கத்தில் இருந்து குமரி முத்து நீக்கம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum