தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் பிரகாஷ்ராஜூடன் பரஸ்பர விவாகரத்து கோரியிருக்கும் லலிதா குமாரி நடிக்க வருகிறார்

Go down

நடிகர் பிரகாஷ்ராஜூடன் பரஸ்பர விவாகரத்து கோரியிருக்கும் லலிதா குமாரி நடிக்க வருகிறார் Empty நடிகர் பிரகாஷ்ராஜூடன் பரஸ்பர விவாகரத்து கோரியிருக்கும் லலிதா குமாரி நடிக்க வருகிறார்

Post  ishwarya Sat Apr 27, 2013 5:24 pm

நடிகர் பிரகாஷ்ராஜூடன் பரஸ்பர விவாகரத்து கோரியிருக்கும் லலிதா குமாரி மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கப் போகிறார். கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரி லலிதா குமாரி.

கே.பாலசந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தின் நாயகியாக நடித்தவர் லலிதா குமாரி. இவருக்கும், நடிகர் பிரகாஷ் ராஜூக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி மனு செய்துள்ளனர்.

இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க லலிதாகுமாரி முன் வந்துள்ளார். செல்வா இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கும் முறியடி படத்தில் கா‌மெடி கேரக்டரில் நடிக்கப் போகிறாராம் லலிதா குமாரி.

இதுபற்றி அவர் கூறுகையில், மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைவது சந்தோஷமாக இருக்கிறது. ‌அதுவும் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் காமெடி கேரக்டரில் நடிக்கிறேன், என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum