தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என்னை ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்குமாறு கேட்கிறார்கள் அமிதாப்

Go down

என்னை ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்குமாறு கேட்கிறார்கள் அமிதாப் Empty என்னை ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்குமாறு கேட்கிறார்கள் அமிதாப்

Post  ishwarya Sat Apr 27, 2013 2:45 pm

இந்தியாவிலேயே அதிக ஒழுக்கம் மிகுந்த நகரம் சென்னைதான். இங்குள்ளவர்களைப் போல மும்பையில் ஒரு கட்டுக்கோப்பான, அற்புதமான படைப்பாளிகளைப் பார்க்க முடியாது. தமிழர்கள் ரொம்ப முற்போக்கானவர்கள். நான் மும்பைவாசியாக இருந்தாலும், பாதித் தமிழன் என்பதுதான் உண்மை. பெருமைக்குரிய தென்னிந்திய தயாரிப்புகளில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

என்னை ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்குமாறு கேட்கிறார்கள். இந்தப் படம் தமிழ்க் கலைஞர்களால் உருவான மிகச் சிறந்த படைப்பு. பால்கியும் பிசி ஸ்ரீராமும் அற்புதமான கலைஞர்கள். இவர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை. என்னைப் பொறுத்தவரை இளையராஜா ஒரு நிஜமான, சுத்தமான இசை மேதை. எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஏற்கெனவே சீனிகும் படத்தின் பாடல்கள் பெரும் சாதனை நிகழ்த்தின. இப்போது பா அதை முறியடித்துள்ளது” என்றார்.

பின்னர் பேசிய இசைஞானி, “அமிதாப் போல ஒரு மகா கலைஞனை பார்ப்பது மிக அரிது. திறமை, அடக்கம் இரண்டும் ஒருசேர அமைந்த நடிகர். இந்தப் படத்தில் எங்கள் பங்களிப்பை விட அமிதாப்பின் பங்களிப்பு உயர்ந்தது, மதிப்பு மிக்கது. பால்கியின் திரைக்கதை படத்தின் மேஜிக்” என்றார்.

தமிழ்த் திரையுலக முக்கியஸ்தர்கள் அனைவருமே திரண்டு வந்து ராஜாவுக்கும் அமிதாப்புக்கும் பொன்னாடை, மலர்க்கொத்து கொடுத்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum