தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் படத்தில் அமிதாப் பச்சன்….?

Go down

தமிழ் படத்தில் அமிதாப் பச்சன்….? Empty தமிழ் படத்தில் அமிதாப் பச்சன்….?

Post  ishwarya Fri Apr 05, 2013 11:45 am

தமிழ் படத்தில் அமிதாப் பச்சன்….? Amitabh-bachchan-picture-1பாலிவுட்டின்
சூப்பர் ஸ்டாரான பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன் தமிழ்
படத்தில் நடிக்க இருக்கிறார். காமராஜ், முதல்வர் மகாத்மா போன்ற படங்களை
இயக்கிய டைரக்டர் பாலகிருஷ்ணன் அடுத்து இந்தியா-பாகிஸ்தான் உறவை
மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க இருக்கிறார். இந்தபடத்தில் தான் ஒரு
முக்கிய ரோலில் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறாராம்.

இதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது, வியாபாரம் செய்வதற்காக
இந்தியா வந்து கடைசியில் நம்மை அடிமைப்படுத்திய இங்கிலாந்து உடன் இந்தியா,
இன்று நட்பு பாராட்டுகிறது. ஆனால் அதே நமது அண்டை நாடான பாகிஸ்தான் உடன்
பகையில் இருக்கிறது. நான் இயக்க போகும் புதிய படம் இந்தியா-பாகிஸ்தான் உறவை
பற்றியது. இப்படம் பாகிஸ்தானின் ஜின்னா முதல் இப்போது கசாப் வரை உள்ளிட்ட
பல விஷயங்கள் பேசப்படும். இதில் முக்கிய ரோலில் அமிதாப் பச்சனை நடிக்க
வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக அவரிடமும் பேச்சுவார்த்தை
நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum