கமல் கருத்து: சிவசக்தி பாண்டியன் எதிர்ப்பு
Page 1 of 1

தமிழ் கலைஞர்களை ஹாலிவுட் கலைஞர்களோடு ஒப்பிட வேண்டாம் என்ற கமல்ஹாஸனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சிவசக்தி பாண்டியன்.
ஆயிரத்தில் ஒருவன் பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல் ஹாஸன், “இது ஹாலிவுட் படம் மாதிரி இருக்குன்னு சொல்லாதீங்க. ஒரு படத்தை இன்னொரு படத்தோடு ஒப்பிட்டு பேசவே கூடாது. வைரமுத்து, ஷெல்லி மாதிரி எழுதுறாருன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.
அவரது இந்தக் கருத்துக்கு தீராத விளையாட்டு பிள்ளை ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் பதில் சொன்னார் தயாரிப்பாளர் சங்க செயலாளரும், திரைப்பட நலவாரிய உறுப்பினருமான சிவசக்தி பாண்டியன்.
“ஐநூறு கோடி, ஆயிரம் கோடின்னு செலவு செய்து ஹாலிவுட்டில் படம் எடுக்கிறார்கள். ஆனால் நமது ஊரைச் சேர்ந்த இயக்குனர் ஒருவர் அதே மாதிரி பிரமாண்டத்தை வெறும் முப்பது கோடியில் கொடுத்திருக்கிறார் என்றால் அதைப் பாராட்ட வேண்டாமா?
ஹாலிவுட் படம் மாதிரி எடுத்திருக்காருன்னு சொல்லாம வேற எப்படி சொல்ல முடியும்? இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேட்டார்.
முன்னதாக தீராத விளையாட்டுப் பிள்ளை ஆடியோவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி ஆகிய இருவரும் சேர்ந்து வெளியிட்டார்கள். படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் காட்டப்பட்டன.
3 நாயகிகள் வேண்டாம் – விஷால்
இந்தப் படத்தில் நீத்து சந்திரா, சாரா ஜேன், தனுஸ்ரீ தத்தா ஆகிய 3 கதாநாயகிகள் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். இதுபற்றி விஷால் கூறுகையில், “பென்ஹர் என்ற பிரமாண்டமான ஆங்கில படத்தை கூட, `ரீமேக்’ செய்து விடலாம். ஆனால், 3 கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடிப்பது அத்தனை சிரமமானது. எனக்கு அவர்களுடன் எந்த மனஸ்தாபமும் இல்லை.
3 கதாநாயகிகளுடன் நடிப்பது என்றால், 10 ‘ஆக்ஷன்’ படங்களில் நடிப்பதற்கு சமமாக உழைக்க வேண்டும். எனவே இனிமேல் 3 கதாநாயகிகளுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்” என்றார்.
விழாவில் பட அதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஜி.கே.ரெட்டி, உதயநிதி ஸ்டாலின், ஸ்ரேயா ரெட்டி, கே.வி.ஆனந்த், டி.சிவா, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், அகத்தியன், திரு, நடிகர்கள் ஜீவா, ஷக்தி, நடிகை நீது சந்திரா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் பேசினார்கள்.
பிஆர்ஓ நிகில் முருகன் வரவேற்றுப் பேசினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமல் கருத்து.. மாறியது க்ளைமாக்ஸ்!
» ஈழப் போராட்டத்தில் மாணவர்கள் : கமல் வெளிப்படையான கருத்து.
» விஸ்வரூபத்துக்கு எதிர்ப்பு-"கலாச்சார பயங்கரவாதம்":கமல்
» சேவை வரிக்கு எதிர்ப்பு … ரஜினி, கமல் உள்பட தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்
» கொடுங்கையூர் சிவசக்தி கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum