விஸ்வரூபத்துக்கு எதிர்ப்பு-"கலாச்சார பயங்கரவாதம்":கமல்
Page 1 of 1

நடிகர் கமல்ஹாசன் பண்பாட்டு பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளிவைக்கவேண்டியது அவசியம் என்றும் தனது விஸ்வரூபம் திரைப்படத்தினை வெளியிடுவதில் உள்ள சிக்கல்களை சட்டபூர்வமாக எதிர்கொள்ளவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இஸ்லாமியர்களை விஸ்வரூபம் திரைப்படம் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் குறைகூறி அதற்குத் தடைவிதிக்கவேண்டுமென்று கோரி பல்வேறு முஸ்லீம் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கவிருப்பதாக அறிவித்ததன் பின்னணியில், தமிழக அரசு, சட்டம் ஒழுங்கினைக் காரணம் காட்டி, நாளை வெள்ளியன்று(25.1.13) வெளியாகவிருந்த அத்திரைப்படத்திற்கு இருவாரத்தடை விதித்திருக்கிறது.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் கமல்ஹாசன், இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில், தான் முஸ்லீம்களுக்கெதிரானவன் என்பது போல அரசியல் காரணங்களுக்காகத் தன்னை சில சிறிய அமைப்புக்கள் சித்தரிக்க முயல்வதாகவும் அது தனக்கு மிகுந்த மனவருத்தத்தினைத் தருவதாகவும், கூறியிருக்கிறார்.
தொழில்ரீதியான வரம்புகளைக் கடந்து எப்போதுமே தான் நாகரிகத்திற்காகவும், மனிதாபிமானத்திற்காகவும் குரல்கொடுத்து வந்திருப்பதாகவும், இந்து முஸ்லீம் நல்லிணக்கத்திற்காகவே உருவாக்கப்பட்ட ஹார்மனி இந்தியா என்ற அமைப்பில் உறுப்பினராயிருக்கும் தான் முஸ்லீம்களை அவமானப்படுத்தும்வகையில் படமெடுத்திருப்பதாகக் கூறுவது தன்னை அவமதிப்பதாகும் என்கிறார் கமல்.
சமூகத்தில் பிரபலமானவர்களைத் தாக்குவது கூட பிரபலமாகும் வழிதானே என்கிறார் அவர்.
நடுநிலை தேசபக்த முஸ்லீம்கள் அனைவரும் தனது திரைப்படத்தைப் பார்த்து பெருமை கொள்வர், அவ்வாறு அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையிலேயே விஸ்வரூபம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் வலியுறுத்துகிறார் கமல்.
இப்பிரச்சினை குறித்த விரிவான செய்திகள் இன்றைய தமிழோசையில் இடம்பெறவுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கமல் கருத்து: சிவசக்தி பாண்டியன் எதிர்ப்பு
» சேவை வரிக்கு எதிர்ப்பு … ரஜினி, கமல் உள்பட தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்
» வடமாகாண பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் கலாச்சார சீர்கேடுகள்: புள்ளிவிபரம் இணைப்பு
» பயங்கரவாதம்
» பயங்கரவாதம் : நேற்று இன்று நாளை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum