தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொடுங்கையூர் சிவசக்தி கோவில்

Go down

கொடுங்கையூர் சிவசக்தி கோவில் Empty கொடுங்கையூர் சிவசக்தி கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 1:56 am

கொடுங்கையூர் எழில் நகரில் புகழ் பெற்ற சிவசக்தி திருக்கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சிவசக்தியை தரிசனம் செய்கிறார்கள்.

திருமண தடை நீங்கும்........

இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகள் நிறை வடைந்துள்ளன. இங்குள்ள சிவசக்தியை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும், காரியத்தடைகள் அடியோடு நீங்கும். தொழில் நஷ்டம் குறைந்து வியாபாரத்தில் செழிப்பை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இக்கோவிலில் அய்யப்பன், நவக்கிரகங்கள், காளி அம்மன், உள்ளிட்ட பல்வேறு பரிகாரங்கள் உள்ளன. புதிதாக செங்கோட்டு வேலவர் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகம்.....

இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடக்கிறது. விழாவில் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், சாந்தலிங்க மருதாஜலம் தம்பிரான் சுவாமிகள், ஊரனடிகளார் சிங்காரவேல் ஐயா, சிவஞான பாலைய சுவாமிகள் பங்கேற்று ஆசி வழங்குகிறார்கள்.

கும்பாபிஷேகத்தை சங்கர நாராயணன் ஆடல ரசுதேசிகர் லாவண்ய குமார், கிருஷ்ணனந்தா, குழந்தைவேல் குருக்கள், விசுவநாதஐயா, திருஞான சம்பந்த சுவாமிகள் ஆகியோர் நடத்துகிறார்கள். காலை 10.30 மணிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடக்கிறது. 11 மணிக்கு மகாதீபாராதனை அன்னதானம் நடை பெறும்.

சித்ரா பவுர்ணமி தீமிதி விழா........

சிவசக்தி கோவிலில் 5-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு சித்ரா பவுர்ணமி தீமிதி விழா நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வடசென்னையில் உள்ள புனித தளங்களில் சந்திரசேகர் நகரில் சிவசக்தி கோவிலும் ஒன்று.

இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் சித்ரா பவுர்ணமி தீ மிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு அடுத்த மாதம் 5-ந் தேதி அன்று சித்ரா பவுர்ணமி தீமிதி விழா நடக்கிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கமல் கருத்து: சிவசக்தி பாண்டியன் எதிர்ப்பு
» வவுனியாவில் சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை' - சிவசக்தி ஆனந்தன்
» வவுனியாவில் சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை' - சிவசக்தி ஆனந்தன்
» ஆயிரங்காளியம்மன் கோவில்
» வெளிமாவட்ட சிங்கள மக்களுக்கு வவுனியாவில் காணி வழங்குவதற்காக அவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை இராணுவம் அவசரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum