தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரிஷாவுக்கு ‘தெலுங்கானா’ சிக்கல்!

Go down

திரிஷாவுக்கு ‘தெலுங்கானா’ சிக்கல்! Empty திரிஷாவுக்கு ‘தெலுங்கானா’ சிக்கல்!

Post  ishwarya Sat Apr 27, 2013 11:29 am

தெலுங்கான போராட்டத்தால் நம்ம ஊரு திரிஷா பெரும் கவலையில் மூழ்கியுள்ளார்.

ஆந்திராவைப் பிரிக்கப் போகிறார்களே என்ற கவலை இல்லை இது. மாறாக ஹைதராபாத்தில் தனது தந்தைக்காக ஆசை ஆசையாக பணத்தை இறைத்துக் கட்டி வைத்துள்ள ஸ்டார் ஹோட்டலை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே என்ற கவலையாம்.

திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணனை நிறைய பேருக்குத் தெரியும். ஆனால் தந்தை கிருஷ்ணனின் நிழலைக் கூட நிறையப் பேருக்குத் தெரியாது. அந்த அளவுக்கு அப்பாவை வெளியுலுகுக்கு பெரிய அளவில் பறை சாற்றாமல் வைத்திருக்கிறார் திரிஷா. அப்பா கிருஷ்ணனும் வெளியுலகுக்குத் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பாதவர்.

சென்னை ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நிர்வாகப் பணியில் இருந்தவர் கிருஷ்ணன். அந்த அனுபவத்தை வைத்து அப்பாவுக்காக ஹைதராபாத்தில் ஒரு ஸ்டார் ஹோட்டலை கட்டிக் கொடுத்துள்ளார் திரிஷா.

பெரும் பொருட் செலவில் கட்டி முடித்துள்ள இந்த ஹோட்டலைத் திறக்க நாள், நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் வெடித்தது தெலுங்கானா போராட்டம். இதனால் ஹோட்டலைத் திறக்க முடியாமல் தவித்து வருகிறாராம் திரிஷா.

போராட்டம் விரைவில் முடிந்து, அமைதியான, சுமூகமான சூழல் ஹைதராபாத்துக்குத் திரும்ப வேண்டும் என்று கடவுளை கும்பிட்டுக் கொண்டிருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரேயாவை விரட்டியது போல் இலியானா படப்பிடிப்பிலும் ரகளை: தெலுங்கானா ஆதரவாளர்கள் போராட்டம்
» நயன்தாரா-த்ரிஷா படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா மாணவர்கள்
» நடிகை திரிஷாவுக்கு சாதனையாளர் விருது
» நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்
» நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum