நயன்தாரா-த்ரிஷா படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா மாணவர்கள்
Page 1 of 1

ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும் தயாரிப்பாளர்கள் தயாரித்து, நயன்தாரா – த்ரிஷா நடித்துள்ள படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தெலுங்கானா மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நயன்தாரா, ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடித்த ‘அடூர்ஸ்’ தெலுங்குப் படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது.
ஆனால் தெலுங்கானா பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகக் கூடாது என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் தெலுங்கானா மாணவர்கள். இதே போல த்ரிஷா – வெங்கடேஷ் நடித்துள்ள ‘ஓம் நமோ வெங்கடேசா’ படத்தையும் திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு நடிகர்கள் ஒட்டு மொத்தமாக ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தெலுங்கானா பகுதிகளில் உள்ள தியேட்டர்களை போராட்டக் குழுவினர் தாக்கி வருகிறார்கள்.
தெலுங்கு படப்பிடிப்புகளிலும் நுழைந்து ரகளை செய்கின்றனர். இதனால் சத்தமின்றி சென்னை மற்றும் தமிழகத்தில் தெலுங்குப் படப்பிடிப்புகளை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில், நயன்தாரா, ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள அடூர்ஸ் வெளியாகிறது. திரிஷா – வெங்கடேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘ஓம் நமோ வெங்கடேசா’ படமும் வெளியாக உள்ளது.
இவற்றின் தயாரிப்பாளர்கள் ஆந்திரா பகுதியைச் சேர்ந்தவர்கள். மேலும் ஜூனியர் என்டிஆரும் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
எனவே தெலுங்கானா பகுதிகளில் இந்தப் படங்களைத் திரையிட எங்கள் கட்சி அனுமதிக்காது என்று தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகரராவ் மகள் சவிதா அறிவித்துள்ளார்.
தெலுங்கானா பகுதி கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடூர்ஸ் ஓம் நமோ வெங்கடேசா படங்களை எடுத்து இருப்பவர்கள் ஒன்றுபட்ட ஆந்திராவை ஆதரிப்பவர்கள். எனவே அந்த படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒஸ்தி படத்தை நாங்கள் திரையிட மாட்டோம்! – திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
» தமிழகத்தில் எந்தத் திரையரங்கிலும் கமல்ஹாசன் திரைப்படம் திரையிட மாட்டோம்: திரையரங்க உரிமையாளர் சங்கம் மிரட்டல்
» விஜய்யின் காவலன் படத்தை திரையிட உயர்நீதிமன்றம் தடை
» விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்குமாறு ரஜினிகாந்த் கோரிக்கை
» விஸ்வரூபம் படத்தை திரையிட விதிக்கப்பட்ட தமிழக அரசு தடை ரத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum