தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரேயாவை விரட்டியது போல் இலியானா படப்பிடிப்பிலும் ரகளை: தெலுங்கானா ஆதரவாளர்கள் போராட்டம்

Go down

ஸ்ரேயாவை விரட்டியது போல் இலியானா படப்பிடிப்பிலும் ரகளை: தெலுங்கானா ஆதரவாளர்கள் போராட்டம் Empty ஸ்ரேயாவை விரட்டியது போல் இலியானா படப்பிடிப்பிலும் ரகளை: தெலுங்கானா ஆதரவாளர்கள் போராட்டம்

Post  ishwarya Wed Apr 10, 2013 1:20 pm

ஸ்ரேயா நடித்த தெலுங்கு படப்பிடிப்பில் தெலுங்கானா ஆதரவாளர்கள் சமீபத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். தெலுங்கானாவை வாழ்த்தி கோஷமிடும்படி ஸ்ரேயாவிடம் அவர்கள் நிர்ப்பந்தித்தனர். அவர் மறுத்தார். இதனால் கோபமடைந்து படப்பிடிப்பு கருவிகளை உடைத்தனர். ஸ்ரேயா கார் மீது கல்வீசி கண்ணாடிகளையும் உடைத்தனர். ஸ்ரேயா அங்கிருந்து பாதுகாவலர்கள் துணையோடு தப்பி ஓடினார்.

இதுபோல் இலியானா படப்பிடிப்பிலும் நேற்று தெலுங்கானா ஆதரவாளர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இலியானா தமிழில் விஜய் ஜோடியாக “நண்பன்” படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லுஅரவிந்த் மகன் அல்லு அர்ஜுன் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள கே.பி.எச்.வி. காலனியில் நேற்று நடந்தது. இலியானா அல்லு அர்ஜுன் நடித்த காட்சிகள் படமாகிக் கொண்டு இருந்தது. அப்போது தெலுங்கானா ஆதரவாளர்கள் கும்பலாக உள்ளே புகுந்தனர். படப்பிடிப்பு நடத்த கூடாது என தகராறு செய்தார்கள். சிரஞ்சீவி ஒன்று பட்ட ஆந்திராவுக்கு ஆதரவாக உள்ளார். அவர் குடும்பத்தினர் நடிக்கும் படங்களுக்கான படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர்.

மீறி படப்பிடிப்பை நடத்தினால் கேமராவை உடைப்போம் என மிரட்டினர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இலியானாவை பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum