ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு கிராமி விருதுகள்!!
Page 1 of 1

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு கிராமி விருதுகள் கிடைத்துள்ளன. ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்காகவும், அந்தப் படத்தில் ரஹ்மானின் சிறந்த இசைக்காகவும் இந்த இரு விருதுகளும் கிடைத்துள்ளன.
கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து டேனி பாயில் இயக்கி வெளிவந்த ஸ்லம்டாக் மில்லினர் திரைப்படம் ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் சிறந்த பாடல் ஜெய் ஹோ மற்றும் இசைக்காக 2 ஆஸ்கர் விருதுகள் ரகுமானுக்கு வழங்கப்பட்டது.
இதன்மூலம் தனிநபராக ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஏர்.ஆர்.ரகுமான் பெற்றார். கடந்த ஆண்டு முழுவதும் பாராட்டு மழையில் நனைந்தார் ரஹ்மான்.
52வது கிராமி விருதுகளுக்கும் இரு பிரிவுகளில் அவரது பாடல் மற்றும் இசை பரிந்துரைக்கப்பட்டிருப்பதை ரஹ்மான் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.
இந்த விருதுகள் கிடைக்கும் என்று நம்புவதாக அவர் கூறியிருந்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை… இசைத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கிராமி இப்போது அவருக்குக் கிடைத்துள்ளது.
ஜெய் ஹோ பாடலின் சிறந்த இசைக்காக ஒரு விருதும், அந்தப் பாடலை எழுதிய கவிஞர் குல்சாருடன் இணைந்து மற்றொரு விருதும் அவருக்கு இப்போது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதும் இதே போல குல்சாருடன் இணைந்து வழங்கப்பட்டகது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது விழாவுக்கு நேரில் சென்றிருந்த ரஹ்மான், விருதுகளைப் பெற்றுக் கொண்டார்.
இந்த விருதின் மூலம், கிராமி விருது வென்ற இந்தியக் கலைஞர்கள் பண்டிட் ரவிஷங்கர், ஜாகிர் உசைன்,விக்கு வினாயக் மற்றுவம் விஸ்வமோகன் பட் வரிசையில் இடம்பெறுகிறார் ரஹ்மான்.
சமீபத்தில்தான் ரஹ்மானுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.
இந்த ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருதுகளில் ஒரு பிரிவில் சிறந்த இசைக்காக ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிராமி விருது: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கருணாநிதி வாழ்த்து
» 2012-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு: 3 தமிழ்ப் படங்களுக்கு 5 விருதுகள்
» ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு: இந்தியாவில் தயாரான 'லைப் ஆப் பை' படத்துக்கு 4 விருதுகள்
» நாளை 58-வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா – தமிழுக்கு 14 விருதுகள்!
» கிராமி விருதுப் போட்டியில் 3 இந்தியர்கள் – வெல்வாரா ஏ.ஆர்.ரஹ்மான்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum