ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு: இந்தியாவில் தயாரான 'லைப் ஆப் பை' படத்துக்கு 4 விருதுகள்
Page 1 of 1

சர்வதேச சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கார் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நேற்று மாலை 5.30 மணிக்கு (இந்திய நேரப்படி) இன்று காலை 8.30 மணிக்கு) தொடங்கியது.
சிறந்த நடிகருக்கான விருது டேனியல் டே லீவிசுக்கு கிடைத்தது. ‘லிங்கன்’ என்ற படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைக்கான விருது ஜெனிபர் லாரன்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘சில்வர் லைனிங்’ படத்தில் செக்ஸ் அடிமையாக இருந்து மீளும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவ்விருது கிடைத்துள்ளது.
சிறந்த துணை நடிகருக்கான விருது கிறிஸ்டோப் வால்ஸ்சுக்கு கிடைத்தது. ‘ஜாங்கோ அன் செயிண்ட்’ என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. 56 வயதான ஆஸ்டிரியன் ஜெர்மன் நடிகரான இவர் தற்போது 2-வது முறையாக ஆஸ்கார் விருதை பெற்றுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2009-ம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார்.
சிறந்த துணை நடிகைக்கான விருது ஆன்னி ஹேத் அவேக்கு வழங்கப்பட்டது. ‘லெஸ் மிசரபில்ஸ்’ என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘லைப் ஆப் பை’ படத்துக்கு 4 ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன. இந்தியாவை கதைக்களமாக கொண்ட இப்படம் 11 பிரிவுகளில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதில் சிறந்த ஒளிப்பதிவு, இசை, டைரக்டர், விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய 4 பிரிவுகளுக்கு விருது கிடைத்துள்ளது.
ஒளிப்பதிவுக்கான விருதை ஒளிப்பதிவாளர் கிளாடியோ மிராண்டாவும், டைரக்டருக்கான விருதை ஆங் லீ பெற்றனர். சிறந்த டைரக்டருக்கான விருதை ஆங் லீ தற்போது 2-வது தடவையாக பெற்றுள்ளார். சிறந்த இசைக்கான விருதை இப்படத்தில் இசையமைத்த மைக்கேல் டண்ணாவும் பெற்றனர்.
‘லைப் ஆப் பை’ படம் இந்தியாவில் புதுச்சேரி மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு பகுதிகளில் படமாக்கப்பட்டது. கடல் பயணத்தின் போது புயலில் உடைந்து சேதமடைந்த படகில் ஒரு ஆசிய புலியுடன் 200 நாட்கள் உயிருக்கு போராடும் ஒரு இளைஞனின் கதைதான் ‘லைப் ஆப் பை’ படத்தின் கதை. இப்படத்தில் 17 வயது இளைஞனாக புதுமுகம் சூரஜ் நடித்து இருக்கிறார். இவர் இந்தியாவை சேர்ந்தவர்.
‘அக்ரோ’ படத்துக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. அதே வேளையில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது ‘ஆமர்’ என்ற ஆஸ்திரியா நாட்டு படத்துக்கு கிடைத்தது. பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற 60 வயது இசை ஆசிரியை மற்றும் அவரது கணவரின் வாழ்க்கை போராட்டத்தை இப்படம் சித்தரிக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு
» 2012-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு: 3 தமிழ்ப் படங்களுக்கு 5 விருதுகள்
» லைப் ஆப் பை படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சி: புதுவை மாணவன் பேட்டி
» சிறந்த நடிகர் விஷால் – சிறந்த நடிகை ரிச்சா: நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு
» மணி ரத்னம் இயக்கியுள்ள ராவணன் படத்துக்கு பல விருதுகள் குவியும் – வைரமுத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum