2012-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு: 3 தமிழ்ப் படங்களுக்கு 5 விருதுகள்
Page 1 of 1
2012-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு: 3 தமிழ்ப் படங்களுக்கு 5 விருதுகள்
சிறந்த படம் - பான் சிங் தோமர் சிறந்த நடிகர்கள் - சிறந்த இயக்குநர் - சிவாஜி லோடன் பாட்டீல்
சிறந்த தமிழ் படம்: வழக்கு எண் 18/9
2012-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. "விஸ்வரூபம்' படத்துக்கு 2, "வழக்கு எண் 18/9' படத்துக்கு 2, "பரதேசி' படத்துக்கு 1 என தமிழ்ப் படங்களுக்கு ஐந்து விருதுகள் கிடைத்துள்ளன.
60-ஆவது தேசிய விருதுகளுக்கான அறிவிப்பு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பாசு சட்டர்ஜி தலைமையிலான நடுவர் குழு திரைப்படப் பிரிவிலும் அருணா ராஜே தலைமையிலான நடுவர் குழு திரைப்படங்கள் அல்லாத (குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் 90 நிமிடங்களுக்குக் குறைவான படங்கள்) பிரிவிலும் விருதுக்கான படங்களைத் தேர்வு செய்தன.
அதில் 14 மொழிகளைச் சேர்ந்த 38 திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: திக்மான்சு துலியா இயக்கிய "பான் சிங் தோமர்' ஹிந்திப் படம் சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. இதில் கதாநாயகனாக நடித்த இர்ஃபான் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மராத்திய மொழிப்படமான "அநுமாதி'யில் நடித்த விக்ரம் கோகலேவும் சிறந்த நடிகர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
"தாக்' மராத்தியப் படத்தில் நடித்த உஷா ஜாதவ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர் சிவாஜிலோடன்பாடீல் சிறந்த இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழுக்கு ஐந்து: கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் தமிழ்ப் படங்களுக்கு ஐந்து விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளன. கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்த "விஸ்வரூபம்', பாலாஜி சக்திவேல் இயக்கிய "வழக்கு எண் 18/9' ஆகிய படங்கள் தலா இரண்டு விருதுகளையும் பாலா இயக்கிய "பரதேசி' ஒரு விருதையும் பெற்றுள்ளது.
"விஸ்வரூபம்' படத்தில் சிறந்த நடன இயக்கத்தை வெளிப்படுத்திய பண்டிட் பிர்ஜு மகராஜ், கலை இயக்கத்துக்குப் பொறுப்பேற்ற லால்குடி என்.இளையராஜா, பூண்ட்டவீ தோர் டவீபாசஸ் ஆகியோர் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
"வழக்கு எண் 18/9' படத்தில் சிறந்த ஒப்பனை செய்த ராஜா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தவிர, சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான விருதும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.
"பரதேசி' படத்தின் சிறப்பான ஆடை வடிவமைப்புக்காக பூர்ணிமா ராமசாமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதர முக்கிய விருதுகள்: "விக்கி டோனர்' ஹிந்திப் படத்தில் நடித்த அனு கபூர் சிறந்த துணை நடிகருக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். "விக்கி டோனர்' படத்தில் நடித்த டோலி அலுவாலியா மற்றும் "தனிச்சல்லாஞான்' மலையாளப் படத்தில் நடித்த கல்பனா ஆகியோர் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
"தேக் இந்தியன் சர்க்கஸ்' ஹிந்திப் படத்தில் நடித்த வீரேந்திர பிரதாப், "101 ஜோத்யங்கள்' மலையாளப் படத்தில் நடித்த மினோன் ஆகியோர் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த பொழுதுபோக்குப் படங்களுக்கான விருதை "விக்கி டோனர்' ஹிந்திப் படமும் "உஸ்தாத் ஹோட்டல்' மலையாளப் படமும் பகிர்ந்துகொண்டுள்ளன. திரைப்படம் அல்லாத ஆவணப் படங்கள், குறும்படங்கள் பிரிவில் "ஷெப்பர்ட்ஸ் ஆஃப் பாரடைஸ்' (கோஜ்ரி மற்றும் உருது மொழி) படம் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைக்கதை - சுஜோய் கோஷ் ("கஹானி' - ஹிந்தி)
சிறந்த வசனம் - அஞ்சலி மேனன் ("உஸ்தாத் ஹோட்டல்' - மலையாளம்)
சிறந்த பாடலாசிரியர் - பிரசூன் ஜோஷி ("சிட்டகாங்' -ஹிந்தி)
சிறந்த இசையமைப்பாளர்- ஷைலேந்தர் பார்வே ("சம்ஹிதா' - மராத்தி)
சிறந்த ஒளிப்பதிவு - சுதீர் பல்சேனா ("கோ-யாத்' - மைசிங் (அசாமில் பேசப்படும் பழங்குடியின மொழி)
சிறந்த படத்தொகுப்பு - நம்ரதா ராவ் ("கஹாணி' - ஹிந்தி)
சிறந்த பாடகர் - சங்கர் மகாதேவன் ("சிட்டகாங்' - ஹிந்தி)
சிறந்த பாடகி - ஆர்த்தி அங்லேகர் ("சம்ஹிதா' - மராத்தி)
சிறந்த அனிமேஷன் படம் - டெல்லி சவாரி (ஹிந்தி)
சிறந்த அறிமுக இயக்குநர்- வேதவிரத பெய்ன் ("சிட்டகாங்' - ஹிந்தி) மற்றும் சித்தார்த்தா சிவா ("101 ஜோத்யங்கள்' -மலையாளம்)
சிறந்த சமூகப் படம் - "ஸ்பிரிட்' (மலையாளம்)
சிறந்த சுற்றுச்சூழல் படம் - "பிளாக் ஃபாரஸ்ட்' ( மலையாளம்)
சிறந்த ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் - "ஈகா' (தெலுங்கு)
சிறந்த மலையாளப் படம் - செல்லுலாய்டு
சிறந்த தெலுங்குப் படம் - "ஈகா'
சிறந்த கன்னடப் படம் - "பாரத் ஸ்டோர்ஸ்'
சிறந்த ஹிந்திப் படம் - ஃபிஸ்மிஸ்தான்
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கொடுத்த சுதந்திரத்தின் பலன்தான் இந்த தேசிய விருது. சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருதைவிட, இந்தப் படத்தில் பணிபுரிந்த ஒப்பனைக் கலைஞர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. தயாரிப்பாளர்கள் சந்திரபோஸ், லிங்குசாமி, நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி. இந்த விருது என்னை இன்னும் சமுதாய சிந்தனைகளை நோக்கி தள்ளும். மகிழ்ச்சி என்பதைவிட இது நெகிச்சியான தருணம். அடுத்தடுத்த பயணங்களுக்கு இந்த விருது உத்வேகம் கொடுக்கும்.
- பாலாஜி சக்திவேல்
பத்திரிகைகள்தான் இந்தப் படத்தை இந்த இடத்துக்கு தூக்கி வந்திருக்கின்றன. நல்ல சினிமாவுக்கான ரசிகன் இந்தப் படத்துக்கான அங்கீகாரத்தை நல்ல முறையில் கொடுத்திருக்கிறான். அந்த ரசிகனின் பார்வைதான் இன்றைக்கு இந்த விருதாக திரும்பி வந்திருக்கிறது. சோகங்கள் கலந்த ஒரு வாழ்க்கையை இந்தப் படத்தில் பார்த்தேபோதே, இதன் உயரங்கள் பற்றி எனக்கு தெரியும். உலக சினிமாக்களுக்கான தமிழ் அடையாளமாக இந்தப் படம் இருக்கும். விருது வாய்ப்பை எங்கள் நிறுவனத்துக்கு அளித்த பாலாஜி சக்திவேலை வணங்குகிறேன்.
- லிங்குசாமி - தயாரிப்பாளர் (திருப்பதி பிரதர்ஸ்)
தேசிய விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியைவிட, ஆச்சரியங்கள்தான் அதிகம் இருக்கிறது. அதிருஷ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது என் உழைப்புக்கு கிடைத்த விருது. பெரிதாக கல்வியறிவு இல்லாதவன் நான். முழுமையான நான்கு வார்த்தைகள் பேசிப் பழக்கமில்லாதவன். மகிழ்ச்சி என்பதை வேறு வார்த்தைகள் எதையும் சொல்லத் தெரியவில்லை. பெரிய பெரிய படங்களில் பணிபுரிந்து அனுபவங்கள் நிறைந்த சுந்தரமூர்த்திக்கே இந்த விருது கிடைக்கவில்லை. அப்படி இருக்கும்போது இந்த விருது எனக்கு ஆச்சரியம்தான். பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோருக்கு நன்றி.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ்ப் படங்களுக்கு 5 தேசிய விருது
» 60-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக ‘வழக்கு எண் 18/9’ தேர்வு
» நாளை 58-வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா – தமிழுக்கு 14 விருதுகள்!
» ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு: இந்தியாவில் தயாரான 'லைப் ஆப் பை' படத்துக்கு 4 விருதுகள்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» 60-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக ‘வழக்கு எண் 18/9’ தேர்வு
» நாளை 58-வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா – தமிழுக்கு 14 விருதுகள்!
» ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு: இந்தியாவில் தயாரான 'லைப் ஆப் பை' படத்துக்கு 4 விருதுகள்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum