மணி ரத்னம் இயக்கியுள்ள ராவணன் படத்துக்கு பல விருதுகள் குவியும் – வைரமுத்து
Page 1 of 1

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள ராவணன் படத்தின் இசை அறிமுக விழா மற்றும் படத்தின் விளம்பர நிகழ்ச்சி நேற்று சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்தது. பத்திரிகையாளர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி இது. மிகக் கச்சிதமாக திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சி 50 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.
மேடையில் அடர்ந்த மரங்கள் அடங்கிய காடு போன்ற அரங்கு நிர்மாணித்து இருந்தனர். அதில் ஆட்டம் பாட்டமுமாய் நிகழ்ச்சிகள் நடந்தன. விக்ரம் ஒரு பாட்டுக்கு காட்டுவாசி வேடமிட்டு ஆடினார்.
இப்படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான் மேடையில் தோன்றி ஒரு பாடலை பாடினார். நிகழ்ச்சிகளை நடிகர் கார்த்திக் , நடிகை பிரியாமணி தொகுத்து வழங்கினார்கள். இவ்விருவரும் ராவணன் படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் பேசும்போது, “மணிரத்னம் படத்தில் மூன்றாவது முறையாக நடிக்கிறேன். இந்தப் படம் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கும்” என்றார்.
இதில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள பிரபு, பிருதிவிராஜ் ஆகியோரும் பேசினார்கள்.
விக்ரம் பேசும்போது, “ராவணன் படம் ராமாயண கதை என்று சொல்ல முடியாது. ராமாயணம், மகாபாரதம், பஞ்சதந்திரம், உள்பட எல்லா புராண கதைகளும் இதில் அடங்கியுள்ளது. காடுகள், மலைகள் என அலைந்து கஷ்டப்பட்டு படத்தை எடுத்துள்ளோம். திரில்லிங் ஆக இருந்தது” என்றார்.
கவிஞர் வைரமுத்து பேசும்போது, “இப்படத்துக்காக ஒரே இடத்தில் அமர்ந்து ஆறு பாடல்கள் எழுதினேன். மணிரத்னம் ஒரு தவம்போல இப்படத்தை எடுத்துள்ளார். ராவணன் படத்துக்காக மணிரத்னம், விக்ரம், ஐஸ்வர்யாராய் மூவருக்கும் தேசிய விருது கிடைக்கும் என்றார். மேலும் பல விருதுகளும் நிச்சயம்,” என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு: இந்தியாவில் தயாரான 'லைப் ஆப் பை' படத்துக்கு 4 விருதுகள்
» நயன்தாராவிற்கு குவியும் பட வாய்ப்புக்கள்
» நாளை 58-வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா – தமிழுக்கு 14 விருதுகள்!
» 2012-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு: 3 தமிழ்ப் படங்களுக்கு 5 விருதுகள்
» கடலில் வைரமுத்து சன் ஆஃப் வைரமுத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum