திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
Page 1 of 1
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
திருவண்ணாமலை சென்னையிலிருந்து 187 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பஞ்ச பூதத்தலங்களுள் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது. மேலும், பூமியின் இருதய ஸ்தானமாகும். நினைத்தாலே முக்தி தரும். இம்மலைக்கோயிலில் அருணாச்சலேஸ்வரர்தான் பிரதான தெய்வம். இந்த மலையுகத்திற்கு யுகம் மாறுபட்டு வருவதாக "ஸ்கந்த புராணம்'' வர்ணித்துள்ளது.
முதல் யுகமாகிய கிருதயுகத்தில் நெருப்பு மலை யாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் மிகுந்த ஒளிவீசும் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் திருவுருக்கொண்டு "அருணாசலம்'' என்று திருப்பெயர் பெற்றது என்பர். சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.
5 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட மிகப் பெரிய உருண்டையான உலோக பாத்திரத்தில் (சுமார் 2000 லிட்டர் நெய் பிடிக்கும் அளவு ) இத்தீபம் ஏற்றப்படுகின்றது. 30 மீட்டர் காடாத் துணியும் 2 கிலோ கற்பூரமும் தேவைப்படுகிறது. இந்த ஜோதியின் ஒளி 35 கி.மீ தொலைவு வரை தெரியும்.
திருவண்ணாமலையில் நாளை அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் முருகப்பெருமானுக்கு ஏற்றப்படுகிறது. இன்றும் தீபதரிசனத்திற்கு முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார் சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடி வந்து கொடிக்கம்பத்தைச் சுற்றிச் செல்வார்.
அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன் மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும் அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். பஞ்சமூர்த்திகளும் தீப ஒளியை தரிசனம் செயவர். முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால் முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒரு முகக் கடவுளானார்.
இதன் காரணமாக `பரணி தீபம்' கொண்டாடப்படுகிறது. ஞானஒளியைத் தரும் இக்கார்த்திகை மாதத்தில், கந்தனின் கதையை விரிவாக உணர்த்தும் கந்த புராணம் மற்றும் மணியான பாடல்கள் அடங்கிய சைவத்திரு முறைகள் போன்ற புத்தகங்களைப் படித்து அண்ணாமலையானின் பரிபூரண அருளைப்பெறலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
» திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்
» திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழா; டிசம்பர் 8-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது
» தி.மலையில் கார்த்திகை உற்சவம் : நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது
» திருவண்ணாமலை தீபம் : தரிசன டிக்கெட் இன்று விற்பனை
» திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்
» திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழா; டிசம்பர் 8-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது
» தி.மலையில் கார்த்திகை உற்சவம் : நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது
» திருவண்ணாமலை தீபம் : தரிசன டிக்கெட் இன்று விற்பனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum