தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறுத்தை – திரைவிமர்சனம்

Go down

சிறுத்தை – திரைவிமர்சனம் Empty சிறுத்தை – திரைவிமர்சனம்

Post  ishwarya Sat Apr 20, 2013 4:17 pm

கார்த்தியின் இருவேட படம். வீடுகள், திருமண மண்டபங்களில் புகுந்து பணம் நகைகள் திருடுபவன் ராஜா. பஸ் நிலையத்தில் ஒரு பெண் கொண்டு வரும் பெரிய பெட்டியை நகை பெட்டி என கருதி அபேஸ் செய்கிறான். அதை திறக்கையில் உள்ளே ஒரு குழந்தை.

அக்குழந்தை ராஜாவை அப்பா என அழைக்க திடுக்கிடுகிறான். அதை தன்னுடன் வைத்து வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. குழந்தையின் பெற்றோரை தேடுகிறான். ஒரு கட்டத்தில் ராஜாவையும் குழந்தையையும் கொல்ல ரவுடிகள் துரத்துகின்றனர்.

அப்போது ராஜாவை போல் இருக்கும் இன்னொருவன் குறுக்கிட்டு, ரவுடி கூட்டத்தை கொன்று அழிக்கிறான். அந்த சண்டையிலேயே அவனும் சாகிறான். அவன்தான் குழந்தையின் நிஜ அப்பாவான போலீஸ் அதிகாரி ரத்தினவேல் பாண்டியன் என தெரிய பிளாஷ்பேக்…

ஆந்திராவில் ஒரு கிராமத்தையே அடிமைப் படுத்தி மூன்று தாதாக்கள் அட்டூழியும் செய்கின்றனர். அங்குள்ள ஸ்டேஷனில் டி.எஸ்.பி.யாக பொறுப்பு எடுக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த ரத்தினவேல் பாண்டியன் தாதாக்களுடன் மோதும் அவரை குத்தி சாய்க்கின்றனர். சக போலீஸ் அதிகாரிகள் காப்பாற்றி தமிழகத்துக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.

இங்கும் அவரை தீர்த்துக் கட்ட ஆந்திர ரவுடிகள் படையெடுக்கின்றனர். பிக்பாக்கெட் ராஜா போலீஸ் அதிகாரியாக ஆள் மாறாட்டம் செய்து ஆந்திர கிராமத்துக்குள் புகுந்து தாதாக்களை வதம் செய்வது கிளைமாக்ஸ்… திருடன், போலீஸ் அதிகாரி என இரு கெட்டப்களில் கலக்குகிறார் கார்த்தி, திருடன் வேடம் வயிற்றை புண்ணாக்கும் ரகம்.

காலனியில் பெண்களுக்கு மொட்டை அடித்து காசு பிடுங்குவது… திருமண வீட்டில் புகுந்து நகை பண்ட பாத்திரங்களை மூட்டை கட்டுவது என கலகலப்பூட்டுகிறார். நகை அணிந்த பெண்களை விலை பட்டியலோடு கற்பனை செய்வதும் “கண்ணா லட்டு திங்க ஆசையா” என நகை பீரோ சாவி கைக்கு கிடைத்து சந்தோஷப்படுவதும் ஆரவாரம். போலீஸ் அதிகாரி கெட்டப்பில் மிடுக்கு காட்டுகிறார்.

ஆந்திர தாதா கூட்டத்தை மீசையை முறுக்கி நொறுக்குவதில் இடி. ரவுடியின் தம்பியை போலீஸ் ஜீப்பில் கட்டி இழுத்து செல்வது பரபர… தமன்னா அழகான காதலி. திருடனை நல்லவன் என ஏமாந்து இவர் காதலிக்கும் சீன்கள் ரகளை. சந்தானம் காமெடி யில் சதம் அடிக்கிறார்.

திருட்டு பணத்தை பங்கு போடுவதில் கார்த்தியுடன் கட்டிப்புரண்டு சண்டை போடுவது… திருமண கோஷ்டியிடம் மாட்டி அடிபட்டு வாழ்க்கையில் எத்தனையோ இடத்துலே திருடி இருக்கேன். மெடிக்கல் ஷாப்பில் திருட வச்சிடடியேடா என கார்த்தியிடம் வேதனைப்படுவது காமெடியின் உச்சம்.

வில்லன்களாக வரும் சுப்ரீத் ரெட்டி, அமீத், அவினாஷ் கொடூரம் காட்டுகின்றனர். தெலுங்கு கதைக்களம். கதாபாத்திரங்கள் அன்னியப்படுத்துகின்றன. கிளைமாக்சில் கொடூர வில்லன் காமெடித்தனமாய் மாறுவது வேகத்தடை… வித்யாசாகர் இசையில் பாடல்கள் தாளம். வேல்ராஜா ஒளிப்பதிவில் பிரமாண்டம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum