தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தீபாவளி ரேஸ்..! – தீபாவளி புதுப்படங்களின் அணிவரிசை

Go down

தீபாவளி ரேஸ்..! – தீபாவளி புதுப்படங்களின் அணிவரிசை Empty தீபாவளி ரேஸ்..! – தீபாவளி புதுப்படங்களின் அணிவரிசை

Post  ishwarya Tue Apr 16, 2013 6:13 pm

செப்டம்பர் முதல் வாரத்தில் ‘மங்காத்தா’ வெளியாகலாம் என்ற செய்தி வலம் வரும் நிலையில், ‘மங்காத்தா’ படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்று இருக்கும் ஐங்கரன் நிறுவனம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியீடு என்ற செய்தியை தனது இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது.

வழக்கமாக வெளிநாடுகளில் பட வெளியிட்ட மறுநாள் இங்கே படத்தை வெளியிடுவார்கள். எனவே, ‘மங்காத்தா’ செப்டம்பர் 1ம் தேதி தமிழ்நாட்டில் வெளியாகலாம்.

இந்நிலையில் தீபாவளி ரேசில் எந்த எந்த படங்கள் கலந்து கொள்ளப் போகின்றன என்று விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்:

நினைத்ததை விட ‘ஒஸ்தி’ பட வேலைகள் வேகமாக நடந்து வருவதால் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். சிம்பு தனது ஃபேஸ்புக் இணையத்தில் இது “ஒஸ்தி தீபாவளி” என்று அறிவித்துள்ளார்.

சூர்யா நடித்து வரும் ‘ஏழாம் அறிவு’ பட பணிகள் இன்னும் அதிகமாக இருப்பதால் படத்தை தீபாவளிக்கு வெளியிடலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் இணையத்தில் “சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர்களுக்கு இது ஸ்பெஷல் தீபாவளியாக இருக்கும் ” என்று தெரிவித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 10ம் தேதி நடைபெற இருக்கிறது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘மயக்கம் என்ன?’ படத்தின் முக்கிய காட்சிகள் முடிவுற்றாலும், இன்னும் பாடல்கள் பாக்கி இருக்கின்றதாம். இப்படமும் தீபாவளிக்கு வெளிவரலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

தீபாவளிக்கு வெளியிடலாம் என்று முடிவு செய்த ‘வெடி’ படக்குழு, தற்போது பெரிய படங்கள் நிறைய வெளிவருவதால் செப்டம்பர் 30ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு எடுத்து இருப்பதாக தமிழ் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்படியோ, தீபாவளிக்கு புதுப்படங்களின் அணிவரிசை ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப் போகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum