முட்டைகோஸ் பொரியல்
Page 1 of 1
முட்டைகோஸ் பொரியல்
தேவையான பொருள்கள்:
முட்டைகோஸ் = அரை கிலோ
பச்சை மிளகாய் = 4
வெங்காயம் = 2
இஞ்சி = சிறு துண்டு
தேங்காய் துருவல் = 2 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
முட்டைகோஸை பொடி பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி தட்டிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் அரியவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதனோடு தட்டிய இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இவை நன்றாக வதங்கியதும் முட்டைகோஸை அலம்பி பிழிந்து விட்டுச் சேர்க்கவும்.
சிறிது வதக்கி உப்பு போட்டு தண்ணீர் லேசாக தெளித்து மூடி வைத்து வேக விடவும். 5 நிமிடம் வெந்தால் போதும்.
5 நிமிடம் வெந்ததும் இறக்கி தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
சுவையான முட்டைகோஸ் பொரியல் தயார். இதை ரைஸ் குறிப்பாக வற்றல் குழம்பிற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum