சி.டி., ஆதாரத்தை வெளியிடுவேன்: மிரட்டும் நடிகை சோனா
Page 1 of 1

“நான் விதித்த கெடு இன்றுடன் முடிகிறது. சரண், பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், அத்துமீறி நடந்து கொண்டதற்கான, “வீடியோ சி.டி., ஆதாரத்தை வெளியிடுவேன் என, நடிகை சோனா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூறினார்.பிரபல பாடகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண், மானபங்கம் செய்ததாக, நடிகை சோனா, போலீசில் புகார் கொடுத்தார். அவர், பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே புகாரை வாபஸ் பெறுவேன் என கூறினார். பாண்டிபஜார் போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். புகார் தொடர்பான வழக்கும் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று, போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த நடிகை சோனா, சரண், தவறாக நடந்து கொண்டதற்கான, “வீடியோ சி.டி., ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறினார்.
நடிகை சோனா, நிருபர்களிடம் கூறியதாவது:நான், சரண் மீது கூறியது பொய்யான புகார் அல்ல, அதற்கான, “வீடியோ சி.டி., ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை, கமிஷனரிடம் தருவதற்காக தான் நான் இங்கு வந்துள்ளேன். விளம்பரத்திற்காகவும், பணத்திற்காகவும், சரண் மீது புகார் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
அதற்கு எனக்கு அவசியமில்லை.மதுவிருந்து நடந்தது உண்மை, அதில் நானும் கலந்து கொண்டேன். விருந்தில், வெங்கட் பிரபுவுடன் நான் பேசிக் கொண்டிருந்த போது, சரண் என்னிடம் தவறாக நடக்க முயன்றதும் உண்மை. நான் புகார் கொடுத்ததும், அதை வாபஸ் வாங்கச் சொல்லி, வெங்கட் பிரபு மற்றும் சரண் தரப்பினர் என்னிடம் கூறினர்.
இருவரும் சேர்ந்து ஒன்றாக அறிக்கை வெளியிட்டு, இப்பிரச்னையை சுமுகமாக முடித்து வையுங்கள் என, அவர்கள் கூறினர். அவ்வாறு நான் செய்தால், நான் கொடுத்த புகார் பொய்யாகி விடும். என்னிடம் தவறாக நடக்க முயன்ற சரண், 10 நாட்களுக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தேன்.
அந்த கெடு, நாளையுடன் (இன்று) முடிகிறது. அவர் மன்னிப்பு கேட்டால், நான் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். அவ்வாறு செய்யாத பட்சத்தில், என்னிடம் உள்ள வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன். இப்போதைக்கு அந்த ஆதாரத்தை கமிஷனரிடம் தருவதற்கே இங்கு வந்துள்ளேன்.
இவ்வாறு நடிகை சோனா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாலியல் புகார்: வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை – போலீசார் மறுப்பு
» தெலுங்கு கனிமொழிக்கு தடைக்கோரி நடிகை சோனா மனு!
» சுங்கவரித்துறை அதிகாரிகளுடன் நடிகை சோனா வாக்குவாதம்
» நடிகை சோனா ஒரு வருடம் சினிமாவில் இருந்து விலகல்!
» நடிகை சோனா மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum