நடிகை சோனா ஒரு வருடம் சினிமாவில் இருந்து விலகல்!
Page 1 of 1
நடிகை சோனா ஒரு வருடம் சினிமாவில் இருந்து விலகல்!
நடிகை சோனா- எஸ்.பி.பி.சரண் தொடர்பான பாலியல் புகார் விவகாரம் தற்போது சமரசத்தில் முடிந்துள்ளது.
சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்ததையடுத்து வழக்கை வாபஸ் பெற்றதாக சோனா கூறினார். ஆனால் இந்த சம்பவங்கள் அவர் மனதை மிகவும் பாதித்துள்ளதாகவும், இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, எனக்கு ஏற்பட்ட கஷ்டம் போல எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. எனக்கு பெண்கள் அமைப்புதான் ஆதரவு கரம் நீட்டின. இப்போது எல்லாம் சுமூகமாக முடிந்துவிட்டது. சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தார். இதனால் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டேன்.
இந்த பிரச்னை ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை தூக்கமே வராமல் தவித்து வருகிறேன். மாத்திரை போட்டுதான் தூங்க வேண்டிய நிலை. இதனால் என் உடல்நிலையை பாதித்து விட்டது. இந்த மன உளைச்சலில் இருந்து விடுபட அமைதியும், ஓய்வும் தேவை. அதற்காக வெளிநாடு போக போகிறேன்.
ஒருவருடம் தற்காலிகமாக சினிமாவை விட்டு விலகப் போகிறேன். வெங்கட்பிரவு இயக்கத்தில் புதுப்படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்து ஒப்பந்தம் போட்டு இருந்தேன். தற்போது அதை தயாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்து நானும் அவரும் விலகிவிட்டோம் என்று கூறியுள்ளார் சோனா.
சோனாவை மீண்டும் பார்க்க ரசிகர்கள் ஒருவருடம் காத்திருக்க வேண்டுமோ?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மன உளைச்சலால் ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகுகிறேன் – நடிகை சோனா
» விஷால் படத்தில் இருந்து கார்த்திகா விலகல்…?
» கடனாளியாக இருந்து சினிமாவில் உயர்ந்தேன்: ஐதராபாத்தில் கமலஹாசன் பேட்டி
» சினிமாவில் இருந்து விலகி விட்டேனா?
» மலையாள நடிகை விலகல் : கார்த்திகாவுக்கு சான்ஸ்
» விஷால் படத்தில் இருந்து கார்த்திகா விலகல்…?
» கடனாளியாக இருந்து சினிமாவில் உயர்ந்தேன்: ஐதராபாத்தில் கமலஹாசன் பேட்டி
» சினிமாவில் இருந்து விலகி விட்டேனா?
» மலையாள நடிகை விலகல் : கார்த்திகாவுக்கு சான்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum