தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டிங்குடன் 2வது திருமணம் : நடிகை கவிதா தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!

Go down

டிங்குடன் 2வது திருமணம் : நடிகை கவிதா தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு! Empty டிங்குடன் 2வது திருமணம் : நடிகை கவிதா தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!

Post  ishwarya Fri Apr 12, 2013 1:41 pm

டி.வி., நடிகர் டிங்குவை சட்டவிரோதமாக 2வது திருமணம் செய்த நடிகை கவிதாவை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அன்புள்ள ரஜினிகாந்த், ஜப்பானில் கல்யாணராமன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தற்போது சின்னத்திரையில் கலக்கி வருபவர் நடிகர் டிங்கு. இவர் சுப்ரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், பின்னர் இவர்களது திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி வைத்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிங்குவின் மனைவி சுப்ரியா, தனது கணவர் தனக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்ததாகவும், வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் ‌போலீசில் புகார் கொடுத்தார். மேலும் இதற்கு டிங்குவின் அம்மா மற்றும் அவரது அக்காவும், நடிகையுமான சோனியாவும் உடந்தை என்று தமது புகாரில் கூறியிருந்தார். சுப்ரியாவின் புகாரையடுத்து நடிகர் டிங்கு, கோர்ட்டில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார்.‌ அதுமட்டுமின்றி தனது மனைவி சுப்ரியா கூறுவதில் உண்மையில்லை என்றும் தமது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாகன வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் சுப்ரியாவின் புகாரின்பேரில், டிங்குவை சட்டவிரோதமாக 2வது திருமணம் செய்த நடிகை கவிதாவை பிடித்து, விசாரிக்க போலீசார் முயற்சித்தனர். ஆனால் கவிதாவோ தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து கவிதாவைக் கைது செய்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தியேட்டரை அபகரித்து நடிகை புவனாவுக்கு கொலை மிரட்டல்: 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
» நடிகை கவிதா மகள் கார் டிரைவருடன் ஓட்டம்: கோவிலில் ரகசிய திருமணம்
» நடிகர் மனோஜ் கே ஜெயனுக்கு 2வது திருமணம்
» தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தது நடிகை அஞ்சலி போலீசில் ஆஜர் பரபரப்பு தகவல்கள்.
» 10ம் வகுப்பு மாணவியை கடத்த முயற்சி: நடிகை சனாகானுக்கு போலீஸ் வலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum