தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை கவிதா மகள் கார் டிரைவருடன் ஓட்டம்: கோவிலில் ரகசிய திருமணம்

Go down

நடிகை கவிதா மகள் கார் டிரைவருடன் ஓட்டம்: கோவிலில் ரகசிய திருமணம் Empty நடிகை கவிதா மகள் கார் டிரைவருடன் ஓட்டம்: கோவிலில் ரகசிய திருமணம்

Post  ishwarya Sat Mar 16, 2013 11:37 am


தமிழ், தெலுங்கு திரைப் படங்களில் முன்பு கதாநாயகியாக நடித்தவர் நடிகை கவிதா.

திருமணத்துக்கு பிறகு பல படங்களில் அம்மா வேடங்களில் நடித்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் மகளிர் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

நடிகை கவிதா ஐதராபாத் அருகே உள்ள செகந்திரா பாத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் மாதுரி (வயது 21). எம்.பி.ஏ. படித்து வருகிறார்.

கவிதா வீட்டில் கரீம் நகர் மாவட்டம் சங்கரப் பட்டணத்தை சேர்ந்த ராஜ்குமார் (25) என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். மாதுரியை கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் பணியை செய்து வந்தார்.

அப்போது ராஜ்குமாருடன் மாதுரிக்கு காதல் ஏற்பட்டது. 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாதுரி டிரைவர் ராஜ்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறினார். ஐதராபாத் பெத்தபள்ளியில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இதில் ராஜ்குமார் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

பின்னர் மாதுரி கூறும்போது, எனது காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறி ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டேன் என்றார்.

இதற்கிடையே மாதுரியின் தந்தை தசரதராஜ் தனது மகள் மாயமானதாக பஞ்சாரஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரகசிய திருமணம் செய்து கொண்ட மாதுரி ராஜ்குமாரை கண்டுபிடித்தனர். மாதுரியை பெற்றோரிடம் அனுப்பிய போலீசார் ராஜ்குமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாதுரி தனது வீட்டில் இருந்து நகையை பக்கத்து அடகு கடையில் ரூ.83 ஆயிரத்துக்கு அடகு வைத்து காதலனுடன் ஓடிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum