தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தியேட்டரை அபகரித்து நடிகை புவனாவுக்கு கொலை மிரட்டல்: 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Go down

தியேட்டரை அபகரித்து நடிகை புவனாவுக்கு கொலை மிரட்டல்: 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு Empty தியேட்டரை அபகரித்து நடிகை புவனாவுக்கு கொலை மிரட்டல்: 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Post  ishwarya Thu Apr 04, 2013 12:42 pm

தசராபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியம். இவரது மனைவி சம்பூர்ணம். இவர்களது மகள் புவனா. இவர் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஏற்கனவே சூப்பர்டா, கலக்குற சந்துரு படங்களிலும் நடித்துள்ளார்.

புவனாவின் சொந்த ஊர் கோவையை அடுத்த அன்னூர் ஆகும். புவனாவிற்கு அன்னூரில் ஒரு தியேட்டரும், 2 வீடுகளும் உள்ளன. வீடுகளை தென்னம் பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருக்கு ரூ. 50 லட்சத்திற்கு விற்பனை செய்தார். பின்னர் சென்னை அண்ணா நகரை சேர்ந்த வேலப்பன் மகன் சுப்பிரமணியத்துக்கு தியேட்டரை விற்க முயன்றார்.

இதற்காக புவனா அவரது தாயார் ஆகியோர் அன்னூருக்கு வந்தனர். அங்குள்ள தியேட்டருக்கு சென்ற போது புவனாவிடம் வீட்டை வாங்கிய சுப்பிரமணியம், அவரது மனைவி மற்றும் மகன் உள்பட 5 பேர் அவரை தியேட்டருக்குள் செல்லவிடாமல் தடுத்தனர்.

உங்கள் வீட்டோடு தியேட்டரையும் நாங்கள் தான் வாங்கியுள்ளோம் என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் சுப்பிரமணியம் நடிகை புவனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து நடிகை புவனா அன்னூர் போலிசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை மிரட்டிய 5 பேரையும் தேடி வருகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டிங்குடன் 2வது திருமணம் : நடிகை கவிதா தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
» நடிகை அனுராதாவுக்கு கொலை மிரட்டல்-கமிஷனரிடம் புகார்
» கள்ளக் காதல் கதை: நடிகை அனகாவுக்கு கொலை மிரட்டல்
» பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தின் தம்பிக்கு கொலை மிரட்டல்
» சுவிட்சர்லாந்துக்கு வரக்கூடாது என்று எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது: நடிகை சங்கீதா- பாடகர் கிரிஷ் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum