‘அம்புலி’ படத்தின் நாயகியான சனம் lekhafoods.com என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள உணவுக்கான இணைய தளத்தின் விளம்பர படத்தில் நடித்திருப்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்த சனத்தை எப்போது சனங்கள் முன்பு காட்டுவார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
Page 1 of 1

பெரிய இடைவெளிக்குப் பிறகு, அடுத்தடுத்த படங்கள் வர ஆரம்பித்திருக்கிறது ஸ்ரீகாந்துக்கு. சமீபத்தில் அவர் நடித்த சதுரங்கம் படம் வெளியாகி நல்ல பெயரை வாங்கித் தந்தது.
இப்போது ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவாவுடன் இணைந்து நண்பன் படம் நடித்து வருகிறார். இந்த நிலையில் புதிதாக ஒரு படத்தில் தனி ஹீரோவாக நடிக்கிறார்.
பாகன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீகாந்தின் ஜோடியாக நடிக்கிறார் ஜனனி அய்யர்.
முகமது அஸ்லம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல இயக்குநர்கள் சேரன், அமீர், ராதா மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் முகமது அஸ்லம். தனது முதல் படத்திலேயே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கிறார் அஸ்லம்.
பாகன் படம் குறித்து அவர் கூறுகையில், “காமெடி கலந்த ஜனரஞ்சகப் படம் பாகன். காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட், வயிற்றைப் பதம் பார்க்கும் அளவுக்கு காமெடி என பக்கா பொழுதுபோக்குப் படம் இது. ஸ்ரீகாந்துக்கு சந்தேகமே இல்லாமல் ஒரு சிக்ஸர் இந்தப் படம். காட்சிக்குக் காட்சி காமெடியில் பின்னிப் பெடலெடுத்துள்ளார் ஸ்ரீகாந்த். அவருக்குள் இத்தனை பெரிய நகைச்சுவை கலைஞர் ஒளிந்திருந்தாரா என எல்லாருமே கேட்கும் அளவுக்கு காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. ரஜினி சாருக்கு ஒரு தில்லுமுல்லு மாதிரி, ஸ்ரீகாந்துக்கு இந்தப் பாகன் அமையும்,” என்றவரிடம் படத்தின் கதை குறித்து கேட்டோம்.
“உருவத்தில் பெரிய யானையை சிறிய உருவம் கொண்ட பாகன் அடக்கி ஆள்கிறான். அதுபோல பிரச்சினைகள் நிறைந்த இந்த பெரிய வாழ்க்கையை சமாளித்து வாழ்பவனே ஹீரோ. வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிமாநிலம், வெளிநாடு செல்லுவோர் மத்தியில், வாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடு செல்லாமல் தன் சொந்த மண்ணில் உழைத்து முன்னேறுகிறான் இந்த பாகன். இந்த மண்ணின் மீது அவ்வளவு காதல்.
என் படத்தில் என் குருநாதர்கள் சேரன், அமீர், ராதா மோகன் பாதிப்பு இருக்கும். காரணம், அவர்களைப் பிடித்துப் போய், அவர் படங்களை ரசித்து அவர்களுடன் பணியாற்றியவன் நான். அதனால் என் படைப்பிலும் அவர்களின் பாதிப்பு இருக்கும். அது தவறும் அல்ல,” என்றார் முகமது அஸ்லம்.
ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக அவன் இவன் படத்தில் நடித்த ஜனனி அய்யர் நடிக்கிறரா். ஸ்ரீகாந்தின் அம்மாவாக கோவை சரளாவும், அப்பாவாக மதராசப்பட்டினம் ஜார்ஜும், நண்பர்களாக வெண்ணிலா கபடி குழு சூரி, அங்காடித் தெரு பாண்டியும் நடிக்கின்றனர்.
ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக் கூட்டம் படங்களில் பணியாற்றிய லஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆன்டனியின் உதவியாளர் கெவின் இந்தப் படம் மூலம் எடிட்டராக அறிமுகமாகிறார். ஸ்டன்ட் சுப்ரீம் சுந்தர், பாடல்கள்- யுகபாரதி, சூர்யா, அறிமுகம் விருச்சிகா. பிஆர்ஓ ஜான்.
முருகானந்தம் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். விபி புரொடக்ஷன்ஸ் சார்பில் இணைந்து தயாரிக்கின்றனர் விஸ்வாஸ் யு லாட் மற்றும் வி புருஷோத்தம்.
மும்பையின் லோனாவாலா, பொள்ளாச்சி மற்றும் வெளிநாடுகளில் படமாகிறது பாகன்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தனுசுடன் ஜோடி சேர ஆசை படும் அம்புலி சனம்!
» ராஜமவுலி படத்தில் பிரசாந்த் ஹீரோ? எப்படிக் கிளம்பியது இந்த செய்தி?
» 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல “கோ” படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது; சேலத்தில் ரசிகர்கள் முன்பு தோன்றி நடிகர் ஜீவா பெருமிதம்
» ரசிகர்களுக்காக “மய்யம்” பெயரில் கமலின் இணைய தளம்
» என்னுடைய வயது 84. இறைவன் அருளால் அன்பான மனைவி, நல்ல பிள்ளைகள், மருமகள்கள், மாப்பிள்ளை என்று எல்லாமும் அமைந்தன. நான்கு வருடங்களுக்கு முன்பு என்னை முந்திக் கொண்டு என் மனைவி இறைவனடி சேர்ந்து விட்டாள். எங்கள் இருவரிடமும் இருந்தவை அனைத்தையும் - நகைகள் உட்பட -

Permissions in this forum:
You cannot reply to topics in this forum