தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல “கோ” படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது; சேலத்தில் ரசிகர்கள் முன்பு தோன்றி நடிகர் ஜீவா பெருமிதம்

Go down

12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல “கோ” படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது; சேலத்தில் ரசிகர்கள் முன்பு தோன்றி நடிகர் ஜீவா பெருமிதம் Empty 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல “கோ” படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது; சேலத்தில் ரசிகர்கள் முன்பு தோன்றி நடிகர் ஜீவா பெருமிதம்

Post  ishwarya Fri Apr 19, 2013 11:22 am

ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் “கோ” டைரக்டர் கே.வி.ஆனந்த் கதை எழுதி இயக்கிய இப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகைகள் கார்த்திகா, பியா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.



இப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் முன்தோன்றி, நடிகர் ஜீவா உற்சாகப்படுத்தி வருகிறார். சேலத்தில் இப்படம் ஓடுகிற ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் நேற்று இரவு 8-30 மணிக்கு ரசிகர்கள் முன்பு கதாநாயகன் ஜீவா, துணை நடிகர் அஜ்மல் ஆகியோர் தோன்றினார்கள்.



ரசிகர்கள் விசில் அடித்தும், ஆரவாரம் செய்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தியேட்டர் உரிமையாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஜீவாவை வரவேற்று அழைத்து சென்றார். அப்போது நடிகர் ஜீவா பேசியதாவது:-



ராம், ஈ. ஆகிய படங்களுக்கு பின்னர் கோ படத்திற்காக சேலம் வந்து உங்கள் முன் நிற்கிறேன். தற்போது வெளியாகும் திரைப்படங்கள் ஒரு வாரம் அல்லது 2 வாரம் தான் ஓடுகிற நிலை, ஆனால் கோ படம் 15 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களாகிய உங்களின் ஆதரவுடன் வெற்றிக்கரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.தொடர்ந்து இப்படம் ஓட ரசிகர்கள் ஒத்துழைக்க வேண்டும்.



இவ்வாறு அவர் பேசினார்.



தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசும் போது கூறியதாவது:-



கோ படம் எனக்கு நல்ல படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. பொதுவாக என்னுடைய படங்கள் இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களும் விரும்பும் வகையில் தான் இருக்கும். ஆனால் கோ படம் தமிழகம் மட்டுமல்லாது கனடா, சிங்கப்பூர், போன்ற பல்வேறு வெளிநாடுகளிலும் மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.



12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல இந்த படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்த படம் வெற்றிக்கு திரைப்படத்தில் பணியாற்றிய அனைவரின் கூட்டு முயற்சி தான் காரணமாகும். அடுத்து நண்பன் படத்தில் நடித்து வருகிறேன். கோ படத்தில் நான் ஸ்டில் போட்டோ கிராபராக என்ன செய்ய முடியுமோ அதை நன்றாக செய்துள்ளேன்.



படம் முழுக்க அந்த கதை தான். இப்படம் பத்திரிகைகளுக்கு பெருமை படுத்தும் படமாகும். கோ படத்தில் முதலில் அஜீத், கார்த்தி, சிம்பு என ஒரு சுற்று சுற்றிய பின்னர் தான் எனக்கு வந்தது. டைரக்டர் கதை சொன்னதுமே பிடித்து விட்டது. எனக்கென்றே உருவாக்கப்பட்ட படம் போல இது அமைந்து விட்டது.



நான் திரையுலகிற்கு வந்தது முதல் மீடியா ஒத்துழைப்புடன் தான் நடித்து வருகிறேன். பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட போது ஸ்டில் போட்டோ கிராபர் ஒருவரின் படத்தை ஆதாரமாக வைத்து தான் துப்பு துலக்கப்பட்டது. என்னை பொறுத்தவரையில் போட்டோ கிராபராக 5 சதவீதம் தான் பணி செய்துள்ளேன்.



இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணை நடிகர் அஜ்மல் உடன் இருந்தார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நல்ல கதை வசனம் உள்ள படங்களில் நடிப்பேன்; ரசிகர்கள் ஆதரவு எனக்கு குறையவில்லை – தேவயானி
» ‘அம்புலி’ படத்தின் நாயகியான சனம் lekhafoods.com என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள உணவுக்கான இணைய தளத்தின் விளம்பர படத்தில் நடித்திருப்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்த சனத்தை எப்போது சனங்கள் முன்பு காட்டுவார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
» 2013ம் ஆண்டு எனக்கு சிறந்த வருடமாக அமைந்துள்ளது: டுவிட்டரில் சுருதிஹாசன்
» இரட்டை இலை பச்சை: சேலத்தில் விஜய் ரசிகர்கள் மோதல்!
» நயன்தாரா தான் எனக்கு முன்னோடி : அமலா பால் பெருமிதம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum