அன்னாவை கைது செய்தது தவறு: தெலுங்கு, கன்னட நடிகர், நடிகையர் கண்டனம்
Page 1 of 1

அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர்-நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அன்னாவை கைது செய்தது தான் மத்திய அரசு செய்த தவறு என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
அன்னா ஹஸாரே திஹாரில் இருக்க நாடே அவரைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் அவருக்கு ஆதரவாக போராட்டங்கள், பேரணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
நாளுக்கு நாள் அவருக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. இணையதளத்தில் மட்டும் 3 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாளைய இந்தியாவை ஒளிமயமானதாக்க இன்று அன்னா ஹஸாரேவை ஆதரியுங்கள். ஊழலை ஒழிக்க உதவி செய்யுங்கள். ஜெய் ஹிந்த்! ஜெய் ஜன் லோக்பால் என்று தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா டுவிட்டரில் எழுதியுள்ளார்.
இது குறித்து இயக்குனரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் கூறியதாவது,
அன்னாவின் இயக்கத்தை அரசு எந்த அளவுக்கு அடக்க நினைக்கிறதோ, அந்த அளவுக்கு ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. ஊழலால் பெரிதும் பாதிக்கப்படும் நடுத்தர மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி அடையும். அன்னா மற்றும் அவரது குழுவின் கோரிக்கைகள் நியாமற்றவை என்று தோன்றவில்லை. நாட்டில் உள்ள அனைவரையும் லோக்பால் மசோதாவில் சேர்ப்பதில் என்ன தவறு?
கர்நாடகாவில் லோக்ஆயுக்தாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எதியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. குற்றம் சாட்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அன்னாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
அன்னா ஹஸாரே போன்று ஆயிரம் பேர் வர வேண்டிக் கொண்டிருக்கிறேன் என்று நடிகை குத்து ரம்யா டுவி்ட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் தொடர்ந்து அன்னாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் எழுதி வருகிறார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
அன்னாவை கைது செய்ததன் மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தவறு செய்துவிட்டது. அரசின் இந்த தவறால் அவர்களுக்கு ஆதரவாக இருந்த சில செய்தி சேனல்கள் கூட தற்போது அன்னாவுக்கு ஆதரவாக மாறியுள்ளன. எதுவும் நடக்கலாம் என்று கூறியுள்ளார்.
தெலுங்கு பாப் பாடகியும், நடிகையுமான ஸ்மிதா அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரபல கன்னட பாடகி சைத்ரா பெங்களூர் சுதந்திர பூங்காவில் அன்னாவுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஊழலை ஒழிக்க வேண்டுமானால் அன்னா ஹஸாரே பின் செல்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நண்பர்கள் கைது என்பதா? நடிகர் சிம்பு பற்றி தவறான வதந்திகள் – டி.ராஜேந்தர் கண்டனம்
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்: “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது”
» கூகுளில் தெலுங்கு, கன்னட பவர்ஸ்டார்களை முந்திய தமிழ் பவர் ஸ்டார்
» கன்னட டி.வி. நடிகை அடித்து கொலை: கணவர் கைது
» கன்னட நடிகர் சுதீப்பின் காதலில் விழுந்த சோனியா அகர்வால்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum