“ஆபரேசன் வேண்டாம்” ஐஸ்வர்யாராய் விருப்பத்தால் சுகப் பிரசவம்
Page 1 of 1

ஐஸ்வர்யாராய் விருப்பப்படி ஆபரேசன் இல்லாமல், சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார். இந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய், அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்பச்சனை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஐஸ்வர்யாராய் பிரசவத்துக்காக மும்பையில் உள்ள பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் அதிகாலையில் பெண் குழந்தை பிறந்தது. சிசேரியன் மூலம் குழந்தை பிறந்ததா? அல்லது இயற்கையாக சுகப்பிரசவம் ஆனதா? என்ற சந்தேகம் பலரின் மனதில் குறிப்பாக இவரது வயதுடைய பெண்கள் மனதில் தோன்றியது.
அதற்கு விடையளிக்கும் வகையில், தனது டுவிட்டரில், தனக்கு சுகப்பிரசவம் ஆனதாக குறிப்பிட்டுள்ளார். பழைய முறையிலேயே சிசேரியன் இல்லாமல் எந்தவித சிரமமும் இன்றி பிரசவம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 38 வயதாகும் ஐஸ்வர்யாராய்க்கு சுகப்பிரசவம் நடந்திருப்பது பலரின் புருவத்தை உயரச் செய்துள்ளது. பொதுவாக 35 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு சுகப்பிரசவம் நடப்பது கடினம் என்ற கருத்து நிலவுகிறது.
இந்த வயதில் உள்ளவர்களில் 60 சதவீதம் பேர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதையே விரும்புவதாக, மகப்பேரு சிறப்பு மருத்துவமனை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஐஸ்வர்யாராய் அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரியிலும், இந்த வயதில் உள்ள பெண்களில் 65 சதவீதம் பேர் சிசேரியன் மூலமே குழந்தை பெற்றுள்ளனர். பிரசவத்துக்கு வரும் பெண்கள், பொதுவாக வார்டில் வேண்டாம். சிசேரியன் பிரிவிலேயே அனுமதியுங்கள் என்று விரும்பி கேட்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் பயம்தான் இதற்கு காரணம் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் 38 வயதாகும் ஐஸ்வர்யாராய், தனக்கு இயற்கையான பிரசவம்தான் நடக்க வேண்டும். சிசேரியனை கூடுமானவரை தவிர்க்க முயற்சி செய்யுங்கள் என்று டாக்டர்களை கேட்டுக் கொண்டார். அவரின் விருப்பப்படியே டாக்டர்கள் இயற்கை பிரசவத்துக்கான வார்டில் அவரை சேர்த்துள்ளனர்.
அவரின் விருப்பப்படியே இயற்கையாக சுகப்பிரசவம் நடந்துள்ளது. ஐஸ்வர்யாராயின் மன உறுதி மற்றும் தன்னம்பிக்கையை டாக்டர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். 35 வயதுக்கு மேல் உள்ள பெண்களிடையே ஐஸ்வர்யாராய் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி, மகப்பேறு தொடர்பான ஆஸ்பத்திரிகளைச் சேர்ந்த சிறப்பு டாக்டர்கள் கூறியதாவது:-
இயற்கை பிரசவம் நடைபெற வயது முக்கியமில்லை. பொதுவாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் தேவையற்ற அச்ச உணர்வு நிலவுகிறது. தங்களால் இயற்கையாக சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று தவறாக நம்புகின்றனர். 45 வயது வரை உள்ள பெண்கள் கூட சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கு மேல் வயதுடையவர்களுக்கு தான் சுகப்பிரசவத்தில் சிக்கல் ஏற்படும். அவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். ஐஸ்வர்யாராயின் நடவடிக்கை, மற்ற பெண்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்தும் என்று நம்புகிறோம். அவரின் துணிச்சலான முடிவை நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ்ப் படமும் வேண்டாம்… தமிழ் ஹீரோக்களும் வேண்டாம்! – அனுஷ்கா
» ஐஸ்வர்யா ராய்க்கு சுகப் பிரசவம்
» நடிகர் சங்கத்தில் ஐஸ்வர்யாராய் உறுப்பினராகிறார்
» மீண்டும் நடிக்க கதை கேட்கிறேன்: ஐஸ்வர்யாராய்
» ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி – டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum